90 இறுதிகளில் மேடை பாடகராக தனது பயணத்தை தொடங்கிய சத்யன், பின்னர் திரையுலகில் கோரஸ் பின்னணி பாடகராக அடியெடுத்து வைத்தார்.
2004ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த‘ வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில்‘கலக்க போவது யாரு’ பாடல் மூலம் பின்னணி பாடகராக உருவெடுத்தார்.
‘சரோஜா’ படத்தில்‘தோஸ்து படா தோஸ்து’, பாடல் மூலம் ரசிகர்களை ஈர்த்தார்.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில்‘அட பாஸு பாஸு’ தனக்கான ஒரு முத்திரை பதித்தார்.
கழுகு படத்தில் ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’ பாடல் மூலம் இளசுகளின் மனதில் இடம் பிடித்தார்.
மாற்றான் படத்தில் ‘தீயே தீயே’,பாடல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி கொண்டார்.
துப்பாக்கி படத்தில் ’குட்டிப்புலி கூட்டம்’ உள்ளிட்ட200க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை பாடியுள்ளார் சத்யன்.