தேசிய விருது பெற்ற ஷோபா தனது 16 வயதில் இயக்குநர் பாலுமகேந்திராவை திருமணம் செய்து கொண்டு, 17 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி ஹோட்டல் ரூம் குளியல் தொட்டியில் நீரில் முழ்கி உயிரிழந்தார்.

சாஜித் அட்யடேவாலா என்பவரை காதலித்து மணம் செய்து கொண்ட திவ்ய பாரதி, 19 வயதில் மும்பையில் தான் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.

70, 80, காலகட்டங்களில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்த பர்வீன் பாபி, 2005ம் ஆண்டு மும்பையில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ஸ்டார் நடிகைகளுக்கு இணையாக கொண்டாடப்பட்ட சில்க் ஸ்மிதா,1996 ஆம் ஆண்டு தனது 35 ஆவது வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

தமிழில் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் முன்னணி நடிகையாக கலக்கிய நிஷா நூர், தயாரிப்பாளர் ஒருவரின் தவறான வழிகாட்டுதலால் 2007-ல் உடல்நலம் பாதித்து உயிரிழந்தார்.

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்த நடிகை வைஷ்ணவி 22 வயதில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.