மழை படத்தில் சொட்டச் சொட்ட நனைந்து, பாவடை தாவணியில் ஜெயம் ரவியுடன் நளினமாக நடனம் ஆடியவர் நடிகை ஸ்ரேயா.

ரஜினியுடன் சிவாஜி படத்தில் வாஜி, வாஜி பாடலில் நீந்திக் கொண்டே வரும் ஸ்ரேயாவின் காட்சிகள் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தன என்றே சொல்லாம்.

தமிழ் தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா, சமீப காலமாக அம்மா கதாபத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில், ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரணுக்கே அம்மாவாக நடித்து அசத்தினார் நடிகை ஸ்ரேயா

சில தினங்களுக்கு முன்னர் ரிலீசாகியுள்ள மிராய் படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கும் அம்மாவாக ஸ்ரேயா நடித்துள்ளார்.

பெரிய பட்ஜெட் படங்களில் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற முடிவால் ஸ்ரேயா இப்படி நடிக்கிறாரா? என கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த கேள்விகளை எல்லாம் கண்டுகொள்ளாத ஸ்ரேயா, மிராய் பட்த்தின் ரிலீஸை கொண்டாட குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இலங்கை கடலில் பீச் உடையில் கணவர் மற்றும் குழந்தையுடன் விளையாடும் வீடியோ& புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஸ்ரேயா வெளியிட்டுள்ளது, வைரலாகி வருகிறது.