‘ரோஜா ரோஜா’ பாடலின் அற்புதமான குரல் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் பாடகர் சத்யன் மகாலிங்கம்.
26 வருடங்களுக்கு முன் வெளிவந்த காதலர் தினம் படத்தில் இடம்பெற்ற இந்த மெலடியை, சத்யன் ஒரு நிகழ்ச்சியில் பாடிய வீடியோ கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. வெறும் 20 வயதிலேயே அந்த பாடலை மிக அழகாக பாடியிருந்தார் என்பது தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
In the search of gold, I found a diamond 🖤
— கபிலன் (@_kabilans) September 6, 2025
His voice is very accurate pic.twitter.com/InQlB7yswh
ஆனால், மெலடி பாடல்கள் பாட அதிக வாய்ப்பு கிடைக்காத நிலையில், சத்யன் மகாலிங்கம் அதிகமாக வேடிக்கையும் உற்சாகமும் கலந்த பாடல்களையே பாடியுள்ளார்.
வசூல் ராஜா MBBS படத்தில் “கலக்கப் போவது யாரு”, சரோஜாவில் “தோஸ்து படா தோஸ்து”, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் “அட பாஸு பாஸு”, கழுகுவில் “ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்” என பல ஹிட் பாடல்களை அவர் தனது குரலில் வழங்கியுள்ளார்.
Heartfelt Thanks to all the Loveable Souls for this unconditional LOVE❤️❤️❤️https://t.co/RCtJqO553K#rojaroja #saadhagaparavaigal #thanksgiving #tribute to my dear #fans #friends & #family #loveyouall #RojaRojaSatyan #satyansinger #trending #reel #kadhalardinam @arrahman pic.twitter.com/RKfDfgKJUT
— Satyan Mahalingam (@SatyanSinger) September 8, 2025
மொத்தத்தில், 30க்கும் மேற்பட்ட பிரபலமான பாடல்களை பாடியுள்ள அவர், தற்போது தனது பழைய வீடியோ வைரலானதை மக்கள் அளிக்கும் அன்பும் ஆதரவுமாகக் கருதி, சமூக வலைத்தளங்களில் நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
