Exclusive

Stay updated with the latest Tamil cinema news, movie releases, reviews, box office updates, and exclusive behind-the-scenes stories. Explore everything about your favorite actors, directors, and upcoming films in one place

தமிழில் பெரிதும் பேசப்படாத ஆனால் தரமான ஐந்து படங்கள்!

தமிழில் பெரிதும் பேசப்படாத ஆனால் தரமான ஐந்து படங்கள் உங்களுக்கு கண்டிப்பாக இதை முயற்சித்து பாருங்கள் இதில் எந்த படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் 1. ஆரண்ய காண்டம் (Aaranya Kaandam) கேங்ஸ்டர் உலகத்தை மிகவும் இயல்பாகவும் இருட்டான முறையிலும் காட்டும் படம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான குணமும் நோக்கமும் இருக்கும். திரைக்கதை, வசனம், நடிப்பு அனைத்தும் மிகவும் தரமாக இருக்கும். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த underrated படங்களில் ஒன்று. 2. மூடர் கூடம் (Moodar Koodam) […]

தமிழில் பெரிதும் பேசப்படாத ஆனால் தரமான ஐந்து படங்கள்! Read More »

Exclusive

மத்திய மாநில உறவுக்கு பிரச்னையை எற்படுத்திய அந்த எலும்புக்கூடு யாருடையது? ஒரு தரமான வெப் சீரீஸ்!

தமிழ்நாட்டில் எட்டு வழிச்சாலை போடுவதற்காக நடத்தப்பட்ட பூமி பூஜையில் மத்திய அமைச்சர் கலந்து கொள்கிறார்.அப்போது அந்த இடத்தில் மண்ணைத் தோண்டியவுடன் ஒரு எலும்புக்கூடு கிடைக்கிறது. இந்த திட்டத்தை அமுல்படுத்த விருப்பமில்லாமல் மாநில அரசு நடத்திய சதி என்று மத்திய அரசு குற்றம் காட்டுகிறது. இதனால் மத்திய மாநில உறவு பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. இந்த நிலையில் காவல் துறை மீது வழக்குப்போட்டு பனிஷ்மெண்ட் போஸ்டிங்கில் பணிபுரிந்து வரும் ஆய்வாளர் மூஸா ராஸா வசம் இந்த வழக்கை காவல்

மத்திய மாநில உறவுக்கு பிரச்னையை எற்படுத்திய அந்த எலும்புக்கூடு யாருடையது? ஒரு தரமான வெப் சீரீஸ்! Read More »

Cinema Reviews, Exclusive

ஜிடிஎன்: நிகழ மறுத்த அற்புதம் – ஜிடி நாயுடுவின் வாழ்க்கையைத் திரையில் சொல்லிய விதம்!

ஒரு பிரபலத்தின் வாழ்க்கையை அப்படியே திரைப்படமாக உருவாக்குவது, கல்லில் சிலை வடிப்பதைப் போன்ற நுட்பமான பணி. ஒரு மனிதரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அப்படியே காட்சிகளாக மாற்றிவிடுவதால் மட்டும் ஒரு நல்ல வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் உருவாகிவிடாது. அதில் எதைச் சொல்ல வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும், எங்கே கற்பனையைச் சேர்க்கலாம், எங்கே உண்மைக்கு விலகாமல் இருக்க வேண்டும் என்பதில் இயக்குநரின் அணுகுமுறை மிக முக்கியமானது. அதனால்தான் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள் சில நேரங்களில் மிகச் சிறப்பாகவும்,

ஜிடிஎன்: நிகழ மறுத்த அற்புதம் – ஜிடி நாயுடுவின் வாழ்க்கையைத் திரையில் சொல்லிய விதம்! Read More »

Exclusive

இந்த சமூகத்தில் புரிந்துகொள்ளப்படாமல் கடந்து செல்லப்படும் பல பெண்களின் உளவியல் வலி!

‘பாலன்’ திரைப்படத்தைச் சுற்றி வரும் சில விமர்சனங்களைப் பார்க்கும்போது, அந்தப் படத்தின் தாயைக் குறித்து “சுயநலவாதி”, “தன்னையும் தன் பிள்ளையையும் தவிர வேறு யாரையும் நம்புவதில்லை” போன்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இந்தக் கதாபாத்திரத்தை வெறும் சுயநலம் என்ற ஒரு வார்த்தைக்குள் அடைத்துவிடுவது, படம் பேசும் உளவியலின் முக்கியமான பகுதியையே தவறவிடுவதாகத் தோன்றுகிறது. பாலனின் தாய் ஏன் அப்படி நடந்து கொள்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ள, அவளது கடந்த காலத்தையும், அவள் எதிர்கொண்ட அனுபவங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். படத்தில்

இந்த சமூகத்தில் புரிந்துகொள்ளப்படாமல் கடந்து செல்லப்படும் பல பெண்களின் உளவியல் வலி! Read More »

Cinema Reviews, Exclusive

விஜய் வெற்றிக்கான ஃபார்முலா ; மனம் திறந்த ‘ஜன நாயகன்’ இயக்குநர் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஹெச். வினோத், தனது அடுத்த படைப்பான ‘ஜன நாயகன்’ வெளியாக உள்ள நிலையில் பல சுவாரஸ்யமான கருத்துகளை பகிர்ந்துள்ளார். தமிழக முதல்வரும் நடிகருமான விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் முதல், தமிழ் ரசிகர்களின் ரசனை, OTT-யின் எதிர்காலம், செயற்கை நுண்ணறிவு (AI), சமூக ஊடகங்கள் மற்றும் ஜனநாயகம் வரை பல்வேறு விஷயங்களைப் பற்றி ஹெச்.

விஜய் வெற்றிக்கான ஃபார்முலா ; மனம் திறந்த ‘ஜன நாயகன்’ இயக்குநர் ஹெச். வினோத் Read More »

Exclusive

‘ஊமை விழிகள்’. அந்த பேசும் விழிகளுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா?

படத்தில் சோழா என்றொரு கடற்கரை ரிசார்ட் இருக்கும். அங்கு யாராவது இளம் பெண் வந்தால் அதுவும் தனியாக வந்தால் அங்கு ஒரு கிழவி பார்த்துக்கொண்டிருப்பாள். அவள் நேரே சென்று அங்கு இருக்கும் ஒருகோவில் மணியை அடிக்க சாரட் வண்டியில் பூட்டப்பட்ட குதிரை சிலிர்க்கும். காரணம் அதற்கு வேட்டைக்கு ஓட வேண்டிய நேரம் வந்துவிட்டது. லாங் கோட் அணிந்த மர்ம மனிதன் சாரட் வண்டியில் துரத்துவார். அடுத்த நாள் கண்கள் நீக்கப்பட்டு பிணமாக கிடைப்பாள் அந்தப்பெண். அந்த சைக்கோ

‘ஊமை விழிகள்’. அந்த பேசும் விழிகளுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா? Read More »

Exclusive

திருவிளையாடல் 60 ஆண்டுகள் பக்தி திரைப்படத்தை தாண்டி சமூக சிந்தனைகளை பேசிய காலத்தால் அழியாத காவியம்!

திருவிளையாடல் 60 ஆண்டுகள் ஏன் இந்த பக்தி திரைப்படம் இன்றும் சமூகப் பொருத்தம் கொண்டதாக இருக்கிறது தமிழ் சினிமாவில் காலத்தை வென்று நிற்கும் சில திரைப்படங்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடிப்பது இயக்குநர் ஏ பி நாகராஜன் இயக்கத்தில் வெளியாகி சிவாஜி கணேசன் மற்றும் சாவித்திரி நடித்த திருவிளையாடல். அறுபது ஆண்டுகளைக் கடந்தும் இந்த திரைப்படம் வெறும் பக்திப் படமாக மட்டுமல்லாமல் சமூக சிந்தனைகள், மனிதநேயம், சமத்துவம் மற்றும் கேள்வி கேட்கும் உரிமையைப் பேசும்

திருவிளையாடல் 60 ஆண்டுகள் பக்தி திரைப்படத்தை தாண்டி சமூக சிந்தனைகளை பேசிய காலத்தால் அழியாத காவியம்! Read More »

Exclusive

மணிரத்னம் படங்களை தனித்துவமாக மாற்றுவது எது?

இந்திய சினிமாவில் சில இயக்குநர்களின் பெயர் மட்டுமே ஒரு திரைப்படத்திற்கு தனி அடையாளமாக மாறிவிடுகிறது. அந்த பட்டியலில் மிக முக்கியமான இடத்தைப் பிடிப்பவர் மணிரத்னம். திரையில் “A Film by Mani Ratnam” என்ற வரி தோன்றும் தருணத்திலேயே ரசிகர்கள் ஒரு தனித்துவமான சினிமா அனுபவத்திற்குத் தயாராகிவிடுகிறார்கள். மணிரத்னத்தின் திரைப்படங்கள் வெறும் கதைகளைச் சொல்லுவதில்லை. அவை மனித உறவுகள், அரசியல், காதல், அதிகாரம், குடும்பம் மற்றும் வாழ்க்கையின் சிக்கல்களை கவிதைபோன்ற காட்சிகளாலும் ஆழமான உணர்வுகளாலும் வெளிப்படுத்துகின்றன. காலம்

மணிரத்னம் படங்களை தனித்துவமாக மாற்றுவது எது? Read More »

Exclusive

‘படிகளில் தடுக்கி விழாதே’ என்றவர்கள், பாதாளத்தை காட்டித் தருவதில்லை -‘களம் காவல்’

மலையாள சினிமாவின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘களம் காவல்’ திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான காட்சி இடம்பெறும். அதில் மம்முட்டியின் கதாபாத்திரம், தன்னை காதலித்த பெண்களுக்கு சயனைட் கொடுக்கும் காட்சியில் அமைதியாக சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பார். அந்தக் காட்சியில் திரையின் ஒரு மூலையில் வழக்கம்போல் “புகைபிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது” என்ற எச்சரிக்கை தோன்றும். ஆனால், அதே காட்சியில் உயிரைக் கணநேரத்தில் பறிக்கும் சயனைட் குறித்து எந்த எச்சரிக்கையும் தோன்றாது. இது வெறும் திரைப்பட முரண்பாடு மட்டுமல்ல. நம்

‘படிகளில் தடுக்கி விழாதே’ என்றவர்கள், பாதாளத்தை காட்டித் தருவதில்லை -‘களம் காவல்’ Read More »

Exclusive

நிராகரிக்கப்பட்ட ஒரு ஆத்மாவிற்கு, “நான் உன்னைக் கைவிட மாட்டேன்” என்று சொல்லப்படும் ஒரு தருணம்-காதல் கொண்டேன் கிளைமேக்ஸ்

காதல் கொண்டேன் திரைப்படம் வெளியாகி இரண்டு தசாப்தங்களைக் கடந்துவிட்டாலும், அதன் கதாபாத்திரங்களும், உணர்வுகளும் இன்றும் புதிய வாசிப்புகளை வழங்கிக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக செல்வராகவனின் கதைகள் காலப்போக்கில் இன்னும் ஆழமாக புரியத் தொடங்குகின்றன. பள்ளி நாட்களில், “திவ்யா… திவ்யா…” என்ற பெயரே காதலின் ஒலியாக மனதில் ஒலித்த காலம் அது. மழையின் வாசம் போல நினைவுகளில் நனைக்கும் திரைப்படங்களில் காதல் கொண்டேன் என்றும் தனி இடம் பிடிக்கும். செல்வராகவனின் நாயகர்கள் ஏன் வித்தியாசமானவர்கள்? செல்வராகவனின் திரைப்படங்களில் வரும்

நிராகரிக்கப்பட்ட ஒரு ஆத்மாவிற்கு, “நான் உன்னைக் கைவிட மாட்டேன்” என்று சொல்லப்படும் ஒரு தருணம்-காதல் கொண்டேன் கிளைமேக்ஸ் Read More »

Exclusive
Scroll to Top