Exclusive

Stay updated with the latest Tamil cinema news, movie releases, reviews, box office updates, and exclusive behind-the-scenes stories. Explore everything about your favorite actors, directors, and upcoming films in one place

திரையிசைப் பாடல்களில் பழமொழிகளின் பாவிப்பு – கண்ணதாசன் முதல் டி.ராஜேந்தர் வரை

தமிழ் திரைப்படப் பாடல்களில் பழமொழிகளும் சொலவடைகளும் பயன்படுத்தப்படும் விதம் எப்போதும் ரசிக்கத்தக்க ஒரு அம்சமாகவே இருந்து வருகிறது. தத்துவம், காதல், நகைச்சுவை, சோகம், கேலி, கிண்டல் என எந்த உணர்வை எடுத்துக்கொண்டாலும், அதற்குள் ஒரு பழமொழியையோ சொலவடையையோ நயமாக நுழைத்து பாடலாசிரியர்கள் பாடலுக்கு தனி சுவை சேர்த்திருப்பதை கவனிக்கலாம். உதாரணமாக, பாமா விஜயம் திரைப்படத்தின் ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ பாடலில் அன்றாட வாழ்க்கைச் சிக்கலை நகைச்சுவைத் தொனியில் சொல்வதற்காக பழமொழி நயமாகப் பயன்படுத்தப்படுகிறது. வாழ்வே மாயம் […]

திரையிசைப் பாடல்களில் பழமொழிகளின் பாவிப்பு – கண்ணதாசன் முதல் டி.ராஜேந்தர் வரை Read More »

Exclusive

மணிரத்தினத்துக்கு ஒரு அரவிந்த்சாமி; பாரதிராஜாவுக்கு ஒரு ராஜா!

பாரதிராஜா அறிமுகப்படுத்திய கதாநாயகிகளில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் முன்னணி நாயகிகளாக வலம் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர் அறிமுகப்படுத்திய கதாநாயகர்களில் கார்த்திக் மட்டுமே பெரிய அளவு நட்சத்திர உயர்வோடு இருந்தார்.. கார்த்திக் அளவு பெரிய அளவில் இல்லாவிடினும் பாரதிராஜாவின் அறிமுகங்களான நிழல்கள் ரவி, பாண்டியன் , நெப்போலியன் உள்ளிட்டவர்களும் ஃபீல்டில் அவர்களுக்கென்று பேர் சொல்லும்படியான ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தனர். பாரதிராஜா தான் ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய ராதிகாவை ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘கிழக்குச்

மணிரத்தினத்துக்கு ஒரு அரவிந்த்சாமி; பாரதிராஜாவுக்கு ஒரு ராஜா! Read More »

Exclusive

நான் ஏரிக்கரை மேலிருந்து… அவரின் குரலில் வெளிப்படும் பிரத்யேக ஒலி, பிறவிக்குமான ஒளி!

90களில் பால்யம், பதின்மத்தை கடந்த பலரும் , ‘சின்னத்தாயி’ திரைப்படத்திற்காக ராஜா கொடுத்த இந்த ‘நான் ஏரிக்கரை மேலிருந்து’ பாடல் மீது ஒரு தீரா மையலைக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக, கிராமப்புறத்தை பின்னணியாகக் கொண்டவர்களுக்கு இது மனதுக்கு மிக நெருக்கமான பாடலாக இருக்கும். நானும் இந்த காலகட்டத்தில் பதின்மத்திற்குள் நுழைந்தவன் என்பதாலும், கிராமப்புறப் பின்னணியைக் கொண்டவன் என்பதாலும் இந்தப் பாடலின் மீது இயல்பாகவே அணுக்கம் உண்டானது. ‘சின்னத்தாயி’ திரைப்படம் வெளியான போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.. எங்கள்

நான் ஏரிக்கரை மேலிருந்து… அவரின் குரலில் வெளிப்படும் பிரத்யேக ஒலி, பிறவிக்குமான ஒளி! Read More »

Exclusive

காலத்துக்கும் காலரை தூக்கிவிட்டுக்கொள்ள அதுவே பிறவிக்கும் போதுமானதும்கூட! ‘ரோஜா’

1991 ல் இயக்குநர் சிகரம் K.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அழகன்’ திரைப்படத்தில் ஸ்வப்னா என்கிற கதாபாத்திரத்தின் வழியாக திரைத்துறைக்குள் நுழைந்தவர் மதுபாலா. பாலச்சந்தரின் திரைப்படத்தில் இவர் அறிமுகமானதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. மும்பையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் மதுபாலா. அவரின் தந்தை ஹிந்தி திரைப்படங்கள் சிலவற்றை தயாரித்திருக்கிறார். அவரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு வந்த இயக்குநர் ஒருவர் மதுபாலாவை அங்கே பார்த்துவிட்டு, தனது படத்தில் அறிமுகப்படுத்துவதாக கேட்டிருக்கிறார். அப்படித்தான் முதல் வாய்ப்பு மதுபாலாவிற்கு அமைந்திருக்கிறது.

காலத்துக்கும் காலரை தூக்கிவிட்டுக்கொள்ள அதுவே பிறவிக்கும் போதுமானதும்கூட! ‘ரோஜா’ Read More »

Exclusive

எத்தனை தூரம் நம் சமூகம் முன்னேறி வந்திருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு ஆவணம்தான்! முந்தானை முடிச்சு

1983 ல் பாக்யராஜ் அவர்கள் எழுதி இயக்கி மாபெரும் வெற்றியடைந்த இந்த முந்தானை முடிச்சு திரைப்படத்தினை, சமீபத்தில் பார்க்கும் வாய்ப்பு அமைந்த போதுதான், என்ன மாதிரி ஒரு திரைக்கதை இது என்று வியந்து பார்க்கும் அனுபவப் பார்வை கூடி வந்திருப்பதை உணர முடிந்தது. இந்தப் படம் பேச இருக்கிற விஷயத்தைப் பற்றி முன்னோட்டம் போல, ஒரு வயதான தம்பதியின் அன்பு பரிமாறலைக் காட்டி தொடங்குகிற போதே, தேர்ந்த எழுத்தாளனின் சிறுகதையை வாசிப்பது போல ஓர் அனுபவத்தைத் தந்து

எத்தனை தூரம் நம் சமூகம் முன்னேறி வந்திருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு ஆவணம்தான்! முந்தானை முடிச்சு Read More »

Exclusive

‘அலுங்குறேன் குலுங்குறேன்’, ‘கூட மேல கூட வச்சி’,‘ஜிமிக்கி கம்மல்’ பிடிக்க காரணம் என்ன?

2015 ஆம் ஆண்டு வெளியான சண்டிவீரன் படத்தில் இசையமைப்பாளர் அருணகிரி கொடுத்த கேட்சியான டியூன் இந்த ‘அலுங்குறேன் குலுங்குறேன்’ பாடல். மண்வாசம் வீசும் இம்மாதிரி மெட்டு அமைப்பிற்கும், பின்னணி இசைக் கோவைக்கும் எப்போதுமே நம்ம ஊரில் வரவேற்பு இருக்கும். என்னதான் மேற்கத்திய சாயல் மெட்டுக்களை டிரெண்ட் என்கிற அடிப்படையில் அதிகமாக அடித்துத் தள்ளினாலும், அவற்றில் பல கேட்கவும் நன்றாக இருப்பினும், இப்படி அரிதாக வரும் கிராமிய மெட்டுகளே நம்மின் ஆதி ஜீன்களுக்கு ஆசுவாசம் தருவனவாக இருப்பதாக ஓர்

‘அலுங்குறேன் குலுங்குறேன்’, ‘கூட மேல கூட வச்சி’,‘ஜிமிக்கி கம்மல்’ பிடிக்க காரணம் என்ன? Read More »

Exclusive

ஆணாதிக்கத்தை சிரிப்போடு கலாய்க்கும் லைட்-ஹார்ட்டெட் எண்டர்டெய்னர் – கட்டா குஸ்தி-2

கட்டா குஸ்தி 2 படம் முழுவதும் slight humour இழையோடிக்கொண்டே செல்லும் விதத்தில் அமைந்திருக்கிறது. அதுவே இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். முதல் பாகத்தைப் போலவே ஒரு பெண்ணின் wrestling கனவு கதையின் மையமாக இருந்தாலும், இந்த இரண்டாம் பாகம் அதைவிட ஆழமாக சென்று பெண் குழந்தை வளர்ப்பு, பெற்றோரின் மனநிலை, குடும்ப புரிதல் போன்ற விஷயங்களை மையப்படுத்துகிறது. அதனால் தான் இது சாதாரண தொடர்ச்சி படம் அல்ல; உணர்ச்சியிலும் கருத்திலும் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்ட குடும்ப

ஆணாதிக்கத்தை சிரிப்போடு கலாய்க்கும் லைட்-ஹார்ட்டெட் எண்டர்டெய்னர் – கட்டா குஸ்தி-2 Read More »

Exclusive

திருச்சி கிழக்கில் போட்டியில்லை: “அரசியலில் தர்மம் முக்கியம்” – ராகவா லாரன்ஸ் விளக்கம்

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று நடிகரும் சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அவர் திருச்சி கிழக்கில் களமிறங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனது எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் இதுகுறித்து விரிவாக பேசியுள்ளார். “எம்.எல்.ஏ சார்” என அழைக்கும் மக்களுக்கு நன்றி வீடியோவில் பேசிய ராகவா லாரன்ஸ், படப்பிடிப்புக்காக செல்லும் இடமெல்லாம், “திருச்சி கிழக்கில் நீங்கள் நிற்க

திருச்சி கிழக்கில் போட்டியில்லை: “அரசியலில் தர்மம் முக்கியம்” – ராகவா லாரன்ஸ் விளக்கம் Read More »

Exclusive

காலத்தின் கண்ணாடி மட்டுமல்ல… நிகழ்காலத்திற்கு சாட்சியும் கூட… பாக்யராஜ் திரைபயணம்!

அப்படி ஒரு கண்ணாடியாகத் தன் சினிமாவை அமைப்பவர்கள் ஒரு சில இயக்குநர்கள்தான். சிலர் தங்களின் கடந்த காலத்தை நிகழ்காலத்தில் படம்பிடித்துக் காட்டுவது ஒரு வகை. சுப்ரமணியபுரம் படத்தில் 80-களின் காலத்தை காட்டியது போல். ஆனால் உண்மையான 80-களின் காலம் எப்படி இருந்தது? இதைக் காட்டிய இயக்குநர்களில் தலையானவர் என்று சொன்னால் அவர் பாக்யராஜ். சுவரில்லாத சித்திரங்கள் என்கிற படம். அதில் கவுண்டமணி ஒரு பெட்டிக்கடை தையலகம் வைத்திருப்பார். இந்த பெட்டிக்கடைகள் 80-களில் ஒவ்வொரு சிறு நகரங்களிலும் காணப்பட்டன.

காலத்தின் கண்ணாடி மட்டுமல்ல… நிகழ்காலத்திற்கு சாட்சியும் கூட… பாக்யராஜ் திரைபயணம்! Read More »

Exclusive

ஏன் பானுப்ரியா இன்றும் ரசிகர்களின் மனதில் வாழ்கிறார்?

தமிழ் சினிமாவின் 1980–90களின் பொற்கால நடிகைகளில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர் நடிகை பானுப்ரியா. கவர்ச்சியை மட்டுமே நம்பாமல், தனது இயல்பான நடிப்பு, அபாரமான அபிநயம் மற்றும் பாரதநாட்டிய திறமையால் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் ரசிகர்களின் மனதில் அழியாத முத்திரையை பதித்தவர். பானுப்ரியாவின் பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை நடிகை பானுப்ரியாவின் இயற்பெயர் மங்கா பாமா (Manga Bhama). இவர் 1966 ஜனவரி 15 அன்று ஆந்திரப் பிரதேசத்தின்

ஏன் பானுப்ரியா இன்றும் ரசிகர்களின் மனதில் வாழ்கிறார்? Read More »

Exclusive
Scroll to Top