Gatta Kusthi 2

ஆணாதிக்கத்தை சிரிப்போடு கலாய்க்கும் லைட்-ஹார்ட்டெட் எண்டர்டெய்னர் – கட்டா குஸ்தி-2

12 / 100 SEO Score

கட்டா குஸ்தி 2 படம் முழுவதும் slight humour இழையோடிக்கொண்டே செல்லும் விதத்தில் அமைந்திருக்கிறது. அதுவே இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். முதல் பாகத்தைப் போலவே ஒரு பெண்ணின் wrestling கனவு கதையின் மையமாக இருந்தாலும், இந்த இரண்டாம் பாகம் அதைவிட ஆழமாக சென்று பெண் குழந்தை வளர்ப்பு, பெற்றோரின் மனநிலை, குடும்ப புரிதல் போன்ற விஷயங்களை மையப்படுத்துகிறது. அதனால் தான் இது சாதாரண தொடர்ச்சி படம் அல்ல; உணர்ச்சியிலும் கருத்திலும் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்ட குடும்ப திரைப்படம்.

கட்டா குஸ்தி 2 – குழந்தை வளர்ப்பை மூன்று கோணங்களில் சொல்வது

இந்தப் படத்தின் அடிநாதம் ஒரு பெண் குழந்தையை வளர்ப்பது பற்றிய பார்வை. ஆனால் அதை ஒரு கோணத்தில் மட்டும் சொல்லாமல், மூன்று முக்கியமான கோணங்களில் படம் அணுகுகிறது:

  • அப்பாவின் பார்வை
  • அம்மாவின் பார்வை
  • அந்தக் குழந்தையின் பார்வை

இதுதான் படத்தின் மிகப்பெரிய பலம். குழந்தை வளர்ப்பில் ஒரு கட்டத்தில், “இவன் சொல்வதுதான் சரி” என்று நாம் மனதளவில் ஒத்துக்கொள்ளத் தொடங்கும். ஆனால் உடனே படம், “இல்லை… பெண் குழந்தையைப் பற்றிய அம்மாவின் பார்வையும், அவளது அக்கறையும் எப்போதும் முக்கியமானதே” என்று இன்னொரு கோணத்தை நமக்குக் காட்டுகிறது.

அதே நேரத்தில், “ஆமாம்… அம்மாதான் சரி” என்று நாமே முடிவு செய்யும் தருணத்தில், “ஒரு அப்பாவுக்கு பொண்ணைத்தவிர வேறு என்ன உலகம் இருக்கப் போகிறது?” என்று அப்பாவின் பாசத்தை மிக அழகாக முன்வைக்கிறது.

இதன் மூலம் படம் சொல்ல வருவது ஒன்றுதான் — குழந்தை வளர்ப்பில் அப்பாவும் சரி, அம்மாவும் சரி. ஆனால் அவர்களுக்குள் புரிதல் இல்லாதபோது தான் பிரச்சனை உருவாகிறது. அதை குழந்தையின் பார்வையிலேயே சொல்லும் போது, The most important thing in being a parent is “Understanding” என்பது மிகவும் தெளிவாக நமக்கு பதிகிறது.

பெற்றோர் கண்டிப்பாக இணைந்து பார்க்க வேண்டிய படம்

இந்தப் படம் பெற்றோரிடம் மிக எளிதாக connect ஆகும்.
அம்மாக்கள் பார்க்கும்போது,
“நம்மள மாதிரியே இருக்காளே இவ…” என்று கதாபாத்திரத்தோடு தங்களை ஒப்பிட்டு உணர்வார்கள்.

அப்பாக்கள் பார்க்கும்போது,
“என்ன இருந்தாலும், அவ செய்றதுதான் குழந்தை நல்லா வளரணும்னு நினைச்சுதான்…” என்று அம்மாவின் கோணத்தை புரிந்துகொள்வார்கள்.

அதே சமயம்,
“நம்ம வீட்டு விஷயமாதிரியே இருக்கு…” என்ற உணர்வில் கணவன்-மனைவி இருவரும் ஒரே புள்ளியில் வந்து நிற்பார்கள். அதுவே இந்தப் படத்தின் உண்மையான வெற்றி.

அதனால்தான் இதை “Should Watch” படம் என்று சொல்ல மனசே வராது.
இது “Must Watch Movie” — குறிப்பாக பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய குடும்ப திரைப்படம் என்று சொல்லலாம்.

கட்டா குஸ்தி 2-ல் நகைச்சுவை எப்படி இருக்கிறது?

படம் எங்கும் போரடிக்காமல் செல்ல இன்னொரு முக்கிய காரணம், கருணாஸ் – காளி வெங்கட் – சுப்பாராஜ் ஆகிய மூவரின் மைல்ட் நகைச்சுவை. சிரிப்பை கட்டாயப்படுத்தாமல், கதையின் ஓட்டத்துக்குள் இயல்பாக வரும் அந்த humour ரசிக்க வைக்கிறது.

குறிப்பாக காளி வெங்கட் பேசும் ஒரு வசனம் தியேட்டரிலேயே சிரிப்பை கிளப்பும் வகையில் இருக்கிறது:

“உன்ன மாதிரி முட்டாப்பய ஒலகத்துலேயே கெடையாதுய்யா… பொண்டாட்டி கோவத்தை அடக்க மாத்திரை இருக்குன்னு எவனோ சொன்னான்னு நம்பிருக்க பாரு… பொண்டாட்டி கோவத்தை எவனாலயா அடக்க முடியும்…?!”

இந்த மாதிரி வசனங்கள் படத்தின் குடும்ப உணர்ச்சியை பாதிக்காமல், அதற்குள் ஒரு லேசான நகைச்சுவை அடுக்கு சேர்க்கிறது.

மோக்ஷா – திரையில் வந்தவுடன் கவனம் முழுவதும் அவர்மேல்

படத்தில் மோக்ஷா வரும்போது திரைமேல் ஒரு தனி கவர்ச்சி உருவாகிறது. அவரை பார்த்தவுடன் கவனம் வேறு எங்கும் செல்லாமல் போகும் அளவுக்கு அவர் screen presence இருக்கிறது.

அவரைப் பற்றி சொல்ல வேண்டுமெனில்,
“கமல்ஹாசன் மாதிரி கேரளத்து வனப்பு” என்றே சொல்லலாம்.

“என்னது கமல்ஹாசன் மாதிரியா?” என்று கேட்கலாம்.
ஆனால் அதற்கான பதில் எளிது — எப்படி கமல்ஹாசன் ஒரு காட்சியில் வந்துவிட்டால் அந்த scene முழுவதையும் தன் வசப்படுத்திக் கொள்வாரோ, அதே மாதிரி மோக்ஷாவும் திரையில் தோன்றும் ஒவ்வொரு தருணத்தையும் ஆக்கிரமித்துவிடுகிறார். அவர் ஒரு ஸ்கூல் டீச்சராக வந்தாலும் கூட, பார்வை அவர்மேல்தான் நின்றுவிடுகிறது.

குழந்தை கதாபாத்திரம் – படத்தின் உண்மையான இதயம்

இந்தப் படத்தின் மிக முக்கியமான பலம், அந்த குழந்தை கதாபாத்திரம். பல குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளின் மனநிலையை, அவர்கள் பார்க்கும் உலகத்தை, பெற்றோரின் சண்டை அல்லது கருத்து வேறுபாடு குழந்தைகளுக்கு எப்படி பட்டுப் போகிறது என்பதைக் குழந்தையின் கோணத்தில் படம் மிக அழகாகப் பதிவு செய்கிறது.

அந்தக் குழந்தையின் உணர்வுகள் நம்மை நினைக்க வைக்கும்:

ஏனைய குழந்தைகள்,
இதுதான் நாமென
பொருத்திக்கொள்ளும்.
இடையிடையே கொஞ்சம்,
திருத்திக்கொள்ளும்…

இந்த வரிகளே படம் சொல்ல வருகிற உண்மையை நிதானமாக நினைவூட்டுகின்றன.

“மூணாவது மனுஷன் பேச்சைக் கேட்காதே” – படத்தின் முக்கியமான செய்தி

படத்தில் அடிக்கடி வரும், குறிப்பாக கிளைமாக்ஸில் வலுப்படுத்தப்படும் ஒரு வசனம்:

“மூணாவது மனுஷன் பேச்சைக் கேட்காதே..!”

இது வெறும் வசனம் அல்ல; இந்தக் குடும்பக் கதையின் மையச் செய்தி. கணவன்-மனைவி, பெற்றோர்-குழந்தை உறவுகளில் வெளிப்புற குரல்கள் எவ்வளவு தாக்கம் செலுத்துகின்றன என்பதையும், அந்த தாக்கம் எவ்வளவு ஆபத்தானது என்பதையும் படம் நினைவூட்டுகிறது.

அதனால் யாராவது
“படம் சுமார்தான்…”
என்று சொன்னாலும், இந்த ஒரு வசனத்தை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

கட்டா குஸ்தி 2 – இறுதி தீர்ப்பு

கட்டா குஸ்தி 2 ஒரு சாதாரண sequel அல்ல. இது பெற்றோர் – குழந்தை உறவு, பெண் குழந்தை வளர்ப்பு, குடும்பத்தில் புரிதலின் அவசியம், அப்பா-அம்மா மனநிலை போன்ற விஷயங்களை நகைச்சுவை கலந்த உணர்ச்சிப் பாணியில் சொல்லும் படம்.

  • குழந்தை வளர்ப்பைப் பற்றி சிந்திக்க வைக்கிறது
  • பெற்றோரின் மனநிலையை புரிய வைக்கிறது
  • குடும்ப உறவின் சிக்கல்களை எளிமையாக பேசுகிறது
  • நகைச்சுவையால் படத்தை லைட்டாக நகர்த்துகிறது
  • குழந்தையின் பார்வையில் பெரிய உண்மையைச் சொல்லுகிறது

அதனால், இது ஒரு நல்ல குடும்ப திரைப்படம் மட்டுமல்ல; ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

ரேட்டிங்: 4/5

குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கலாம். பெற்றோர்கள் தவறாமல் பார்க்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top