30 ஏக்கர் பரப்பளவில் இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதி செட் ‘தி பாரடைஸ்’ படத்திற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படுகிறது.
சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பில் உருவாகும் இந்தச் செட், திரையுலகில் இதுவரை காணாத புதிய உலகத்தை ரசிகர்களுக்கு தரவுள்ளது.
நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தசரா மூலம் மாபெரும் வெற்றிபெற்ற இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா, தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியில் ‘தி பாரடைஸ்’ படத்தையும் இந்திய சினிமாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க படைப்பாக உருவாக்கி வருகிறார்.
We went all in.
— Nani (@NameisNani) August 11, 2025
We are ready to go all out now.
Wrapped up an intense one.
Gearing up for the next schedule.#TheParadise https://t.co/WsHdXv7Mt5@odela_srikanth 🔥@anirudhofficial 🔥 pic.twitter.com/xJ4Mjr3ZZb
படக்குழுவின் தகவலின்படி, இந்த செட், பாகுபலி படத்தில் காணப்பட்ட “மகிழ்மதி பேரரசு” அளவிலேயே பிரம்மாண்டமாக அமையும். ஆனால் இங்கு அரண்மனைகள் இல்லாமல், பரந்து விரிந்த குடிசைப்பகுதிகள் காணப்படும்.
அந்த குடிசைப்பகுதியின் மையத்தில் ஒரு பெரிய வளைவு (Arch) அமையும். இது கதாநாயகனின் பேரரசின் அடையாளமாக படம் முழுவதும் மையக் குறியீடாக இருக்கும்.
இந்த அமைப்பு, ரசிகர்களால் ஏற்கனவே “ஸ்லம்ஸ்களின் பாகுபலி” என்று அழைக்கப்படுகிறது. பிறப்பிலிருந்தே குடிசைப்பகுதியில் வாழ்ந்து, பின்னர் உச்சிக்குச் செல்வதைக் கூறும் கதாநாயகனின் வாழ்வுப் பயணத்தை காட்சிப்படுத்தும் விதமாக இந்தச் செட் உருவாக்கப்படுகிறது.
முன்னதாக நன்னக்கு பிரேமதோ, ரங்கஸ்தலம் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்ரீகாந்த் ஓடேலா, தனது முதல் படமான தசராவிலேயே 100 கோடிக்கு மேல் வசூலுடன் வெற்றியைப் பெற்றார்.
விமர்சகர்களின் பாராட்டையும், நானியின் கரியரில் மிகப்பெரிய வெற்றியையும் பெற்ற அவர், இப்போது தி பாரடைஸ் மூலம் தனது படைப்பாற்றலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்குத் தயாராகியுள்ளார்.
இப்படத்திற்கான இசையை ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் அமைக்கிறார். முன்னதாக அனிருத் மற்றும் அர்ஜுன் சாண்டி குரலில் வெளிவந்த பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளன.
SLV சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் தி பாரடைஸ் திரைப்படம், 2026 மார்ச் 26 அன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இந்த படம் 8 மொழிகளில்—இந்தி, தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், ஸ்பானிஷ், வங்காளம், கன்னடம், மலையாளம்—வெளியிடப்படுகிறது.
சினிமாவின் எல்லைகளைத் தாண்டி, மறக்கமுடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு தரவிருக்கும் இந்த திரைப்படம், இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்கவிருக்கிறது.
