சிவகார்த்திகேயனின் மதராஸி படம் திரையரங்குகளில் கலக்கி வருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையை அனிருத் அமைத்துள்ளார்.
உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த படம் இதுவரை ரூ.80 கோடி வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மட்டுமல்ல, பல திரைப்பிரபலங்களும் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை மழையென பொழிந்து வருகின்றனர்.
அந்த வரிசையில், நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக சிவகார்த்திகேயனை தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அவர் தனது தனித்துவமான ஸ்டைலில் –
“My God… Excellent! என்ன Performance..! என்ன Actions-உ! Super Super SK..! ரொம்ப பிடித்திருந்தது… Action Hero ஆகிட்டீங்க… God bless… God bless…”
Just received the appreciation for #Madharaasi from my idol, my Thalaivar #Superstar @rajinikanth sir 😍
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 10, 2025
“My god, excellent!
Enna performance!
Enna actions!
Super super SK!
Enakku romba pudichirundhadhu.
Action hero aagiteenga.
God bless, God bless.”
Heartfelt wishes from my…
என்று நெஞ்சாரப் பேசியதாக, சிவகார்த்திகேயன் தனது X பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
