Sony Liv OTT: இந்தாண்டு வெளியாகும் படங்கள், தொடர்களின் ப்ரமோ அறிவிப்பு!

பிரபல ஓடிடி தளங்களில் சோனி லிவ் முன்னணியில் திகழ்கிறது. பல வெற்றிகரமான ஒரிஜினல் வெப் தொடர்கள், முக்கியமான மலையாள திரைப்படங்களை வெளியிட்டு வரும் சோனி லிவ், 2025-ல் வெளியாகும் திரைப்படங்கள், தொடர்கள், ஷோக்கள் என அனைத்தையும் அறிவிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது.

பிரபல தொடர்களின் அடுத்த சீசன்கள்:

Scam 2010 (Hansal Mehta இயக்கத்தில்) – Scam 1992 & Scam 2023 வெற்றியைத் தொடர்ந்து Maharani Season 4, Freedom at Midnight Season 2, Gullak Season 5, Undekhi Season 4

தமிழ் வெளியீடுகள்

Sethurajan IPS
பிரபுதேவா, OTT-வில் முதல் முறையாக IPS அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். ரஃபிக் இஸ்மாயில் இயக்கியுள்ள இந்த அரசியல் பின்னணிக் கொலை மர்மத் திரில்லர், சமூக-அரசியல் சதிகளை மையமாகக் கொண்டதாகும்.

Free Love
மிர்னாலினி ரவி நடிப்பில், இயக்குனர் அப்பாஸ் அஹ்மது இயக்கும் Free Love சமூக நெறிமுறைகளுக்கு சவால் விடுக்கும் தனிச்சிறப்பான காதல் கதை.

Theevinai Pottru
சத்யராஜ் கதாநாயகனாகவும், ஐஸ்வர்யா லெக்ஷ்மியின் முதல் தமிழ் OTT படமாகவும் வரும் Theevinai Pottru ஊரக சூழலில் நடைபெறும் கொலை மர்மத் திரில்லர்.

The Madras Mystery – Fall of a Superstar
நஸ்ரியா பாஹத் முன்னணியில் நடிக்கும் இந்த வரலாற்று குற்ற நாடகம், ஒரு சூப்பர்ஸ்டாரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை மையமாகக் கொண்டுள்ளது.

Kuttram Purindhavan – The Guilty One
செல்வமணி இயக்கத்தில், பசுபதி நடித்துள்ள Kuttram Purindhavan, “குற்றம் – தண்டனை – உண்மையான குற்றவாளி யார்?” என்ற கேள்வியைச் சுற்றி நகரும் திகில் திரில்லர். இதில் லக்ஷ்மிப்ரியா, சந்திரமௌளி, விதார்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தெலுங்கு வெளியீடுகள்

Brinda Season 2
வெற்றிகரமாக ஓடிய Brinda திரில்லரின் இரண்டாம் பாகத்தில் த்ரிஷா மீண்டும் நடிக்கிறார். இயக்கம்: சூர்யா மனோஜ் வாங்களா.

Black and White – Rise of the Shadow
ஜகபதி பாபு முன்னணியில் நடிக்கும் திகில் கலந்த திரில்லர்-டிராமா.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்