தனியார் தொலைக்காட்சிகளில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பெண் வேடங்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நாஞ்சில் விஜயன். இவர் திருமணமாகி, மரியா என்ற மனைவியுடன் குடும்ப வாழ்க்கையில் இருந்து வருகிறார். மேலும், இவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
இந்நிலையில், நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி ஏமாற்றிவிட்டதாக திருநங்கை வைஷு ஒருவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் சமூக வலைதளங்களில் மற்றும் செய்தி ஊடகங்களில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
அந்த புகாரில்,” கடந்த 15 ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறேன். அதில் கடந்த 5 வருடங்களாக நானும், நாஞ்சில் விஜயனும் காதலித்து வந்தோம், தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறிவிட்டு பாலியல் ரீதியாகவும் பயன்படுத்திக் கொண்டார். திருமணம் ஆன பிறகும் என்னுடன் பழகிக்கொண்டு தான் இருந்தார்.
கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு கூட நாங்கள் இருவரும் ரிசார்ட் சென்று இருந்தோம். அதன் பிறகு, நாம் பழக வேண்டாம், அடிக்கடி வீட்டில் சண்டை வருகிறது என்றார். இப்போது என்னை திருநங்கை என்ற காரணத்தை காட்டி திருமணம் செய்ய மறுக்கிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதில் விளக்கமளித்து நாஞ்சில் விஜயனும் அவரது மனைவி மரியாவும் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் அதில் ” ஏன் வைஷு இப்படி பன்ணீங்க.
என் கணவர இப்படி கொச்சை படுத்திட்டீங்க, வெளியில தலை காட்ட முடியல. எங்க ரெண்டு பேர் நடுல பிரச்சனை கொண்டு வரதுக்காக இப்படி பண்றீங்களா?, எனக்கும் வைஷுவிற்கு எந்த ஒரு தொடர்பும் கிடையாது, நான் அவரை ஒரு சகோதிரி, தோழியை போல் தான் பார்த்தேன். என் மீது அவர் அவதூறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார்”
என கூறியுள்ளார்.
