நீயா? நானா? Dad Little Princess ஆண்களுக்கு எதிரான வன்முறை!

“நீயா? நானா?” வில் Day Little Princess என்ற அத்தியாயத்தைப் பார்த்தேன். இன்னும் சொல்லப்போனால், என்னால் முழுவதுமாக பார்க்க பிடிக்கவில்லை. கொஞ்சம்தான் பார்த்தேன். அதற்கே அந்த பெண்கள் மீதும், அவர்களின் தந்தையினர் மீதும் கோபம் வந்தது.

திருமண பந்தம் என்பது ஒரு ஆண்ணுக்கும், ஒரு பெண்ணுக்கும் புதிது. மறுப்பதற்கில்லை. ஆனால், அந்த பந்தத்தின் பொறுப்புகளை ஆண்கள் ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்.

பெண்கள் இப்படியே இளவரசியாக இருக்கிறார்கள் என்றால், அது அந்த ஆண்ணுக்கு எதிரான வன்முறையே !

உண்மையில் ஆண்ணுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள் பேச வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். ஏனென்றால், திருமணமான ஆண்கள் குடும்ப பொறுப்புகளை விரைவாக ஏற்றுக்கொள்கிறான்.

பெண்கள் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளவதில்லை. அப்படியே ஏற்றுக்கொண்டாலும் உலகத்தில் தான் மட்டும்தான் கஷ்டப்படுகிறோம் என்ற பிம்பத்தை ஆண் மனதில் விதைக்க முயற்சிக்கிறாள்.

திருமணத்திற்கு பிறகு, பெண்ணின் சம்மதம் இல்லாமல் தொடுவது Rape என்று சட்டம் இருக்கிறது. ஆனால், ஆண்ணின் தேவைக்கு பெண் சம்மதிக்காமல் இருப்பது எதிரான சட்டம் இருக்கிறதா? ( உடனே, பெண்ணின் உடலில் ஆயிரம் பிரச்சினை இருக்கிறது.

உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்க வேண்டாம்.) நான் சொல்ல வருவது திருமணமான பெண், தன் கணவனை முழுவதுமாக நிராகரிப்பது. திருமணமான பெண் தினமும் வன்கொடுமை செய்வதை வெளியே சொல்ல முடியாததுபோல், ஒரு ஆண் மனைவியால் நிராகரிக்கப்படுவதையும் வெளியே சொல்ல முடிவதில்லை. அதற்கு, சட்டம் இருப்பதாக தெரியவில்லை.

கணவன் தன் அன்பை நிருபிக்க ஏதாவது பொருட்கள் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பது. தன் தேவைகளை அவன் நிறைவேற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறுவது.

அதை முடியாமல் போகும்போது எதிர்மறையாக நடந்துக்கொண்டாலோ அல்லது மிரட்டியோ சாதிப்பது என்று ஆண்களுக்கு எதிரான வன்முறையாகவே இருக்கிறது.

இன்னும் பல குடும்பங்கள் ஆண் மட்டுமே வேலைக்கு செல்லும் சூழ்நிலை இருக்கிறது. (பெண்கள் சமையல் மட்டுமே செய்ய வேண்டுமா? என்று கேள்வி கேட்பவர்கள். இதற்கு பதிலளிக்க வேண்டும்.) சொல்லப்போனால், ஆண் தான் வேலைக்கு சென்று பொருளாதார ரீதியாக குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற கடமை அவன் மேல் திணிக்கப்படுகிறது.

கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு போகும் காலத்தில், கணவன் மட்டுமே செல்லும்போது, அந்த கணவன் சுயதொழில் தொடங்கவோ அல்லது தனது கனவை நோக்கி செல்லலாம் என்று நினைக்க தோன்றும். வேலைக்கு செல்லாத மனைவி “கனவை நோக்கி ஓடு, வீட்டு செலவை நான் பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லமாட்டாள். இது ஆண்ணுக்கு எதிரான வன்முறையே!

அந்த “நீயா? நானா?” நிகழ்ச்சியில், ஒருவன் ( மிகவும் அப்பாவி என்று நினைக்கிறேன்) தன் மனைவி அப்பாவுடன் இருக்க கோயம்பேடுவில் வீடு வாங்கி மாமானர் வீட்டு பக்கத்தில் இருந்திருக்கிறான். தினமும் வேலைக்கு Koyembedu – OMR 30-30 கி.மீ என்று 60 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும்.

இந்த வயதில் பெரிதாக தெரியாது. ஆனால், 40 வயது தாண்டும்போது மிக பெரிய அழுத்தமாகவே இருக்கும். எதோ ஒரு கட்டத்தில் Burst-Out ஆகும்போது, “நீ அப்போவே சொல்ல வேண்டியதுதானே?” என்ற எளிமையான கேள்வியோடு பெண் கடந்து சென்றுவிடுவாள்.

அவ்வளவு வருடம் தன் மீது இவ்வளவு பெரிய வன்முறை நிகழ்த்தப்பட்டதற்கு எளிமையான கேள்வியே பதிலாக இருக்கும். (நியாயமாக அந்தப் பெண்ணின் தந்தை மகள் மீது பாசம் இருந்தால், OMR-ல் வீடு வாங்கி அங்கு சென்றிருக்க வேண்டும்.)

உண்மையில், ஆண்கள் தங்கள் மீது வன்முறை நிகழ்த்தப்படுவதை ஆண்கள் அறிவதில்லை. பொறுப்பு, கடமை, அன்பு என்ற வார்த்தையில் அடக்கி ஆளப்படுகிறார்கள். இந்த விஷயத்தில் பெண்களுக்கு இருக்கும் தெளிவு ஆண்களுக்கு இருப்பதில்லை.

இதனால்தான், சில திருமணமான ஆண்கள் தங்கள் மனைவியின் சகோதரன் மீதும், தந்தை மீதும் வன்மத்தை வளர்த்து கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். மனைவியிடம் தன் மீது சுமத்தப்படும் சுமைகளை பகிராமல் இருப்பது, அவளிடம் தாங்கிகொள்ள முடியவில்லை என்று சொல்லமுடியாமல் இருப்பது, தன் மகன்/மகள் பாதிக்கப்படுவாளோ என்ற அச்சத்தில் இருப்பது போன்ற விளைவுகள் அவள் அன்பு செலுத்து பிறந்த வீட்டு மீது கோபமாக வளர்கிறது. இதில் கூட, ஒரு ஆண் இன்னொரு ஆண் மீது வன்முறை நிகழ்த்துகிறான். பெண்கள் Safe-ஆக இருக்கிறார்கள்.

40 வயது கடந்த பிறகு, ஆண்கள் தன் மனைவி மறைமுகமாக வன்முறை நிகழ்த்தியதை உணர்கிறார்கள். ஒரு கட்டத்தில் கோபத்தைவிட சோர்வுதான் அதிகமாக மிஞ்சுகிறது. அவர்களிடம் எதிர்ப்பார்க்க ஒன்றுமில்லை என்று ஆண்ணுக்கு தெரிந்து தெளிவு பிறக்கும்போது, அது அந்த பெண்ணுக்கு பிடிப்பதில்லை.

(தெளிவான ஆண்களை பெண்களுக்கு எந்த காலத்திலும் பிடிப்பதில்லை.) ஆணாதிக்கம், பெண் அடிமைத்தனம் என்று வன்முறைக்கு பலியான ஆண் மீது பழிகள் சுமத்தப்படுகிறது. இதுவே விவகாரத்தில் முடிகிறது. இன்னும் ஆண்ணுக்கு எதிரான வன்முறையைப் பற்றி அலச பல விஷயங்கள் இருக்கிறது.

“நீயா? நானா?”-வில் நாய்க்காக பதிவிட்டவர்கள், இதற்கு பேசியிருக்க வேண்டும். நாய் மேல் காட்டப்படும் குறைந்தப்பட்ச கருணை குடும்ப பொறுப்புகள் ஏற்கும் ஆண்கள் மீது இருப்பதில்லை. என்று எழுத்தாளர் குகன் கண்ணன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்