அந்த ரெண்டு வார்த்த..! “DUDE” குறித்து பிரதீப் ரங்கநாதன் கொடுத்த அப்டேட்

லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். அதன் பின்னர், இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘ட்யூட்’ படத்தில் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ஊரும் பிளட்’ கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அது யூடியூபில் 15 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது.

‘ட்யூட்’ படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், படத்தைப் பற்றிய புதிய தகவலை பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,
“இனிமே லவ் பண்ணும் பொண்ணு விட்டுப் போனால், அவளைப் பார்த்து இந்த இரண்டு வார்த்தைகளை சொல்லுங்க… அந்த இரண்டு வார்த்தைகள் என்ன என்று…”

என குறிப்பிட்டுள்ளார். மேலும், இன்று மாலை 4.35 மணிக்கு படத்தின் 2வது சிங்கிள் அப்டேட் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்