கால் நூற்றாண்டு கடந்த பின்னரும் ரிதம் படத்தின் பாடல்கள் இன்னும் கொண்டாடப்படுகின்றன என்று கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் வசந்த் இயக்கத்தில், 2000ஆம் ஆண்டு வெளிவந்த ரிதம் படத்தில் அர்ஜூன், மீனா, ரமேஷ் அரவிந்த், ஜோதிகா, நாகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்த படத்தின் ஐந்து பாடல்களுக்கும் கவிஞர் வைரமுத்து வரிகளை எழுதியிருந்தார்.
25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், “நல்ல பாடல்கள் தேன்போல்… கெட்டுப் போவதில்லை” என்று அவர் பதிவு செய்து, ரிதம் பாடல்களின் அழிவற்ற இனிமையை நினைவுகூர்ந்துள்ளார்.
கால் நூற்றாண்டு
— வைரமுத்து (@Vairamuthu) September 18, 2025
கழிந்தபின்னும்
ரிதம் படப் பாடல்கள்
கொண்டாடப்படுவதைப்
புன்னகையோடு பார்க்கிறேன்
இசை மொழிக்கு
அழகு தருகிறது
மொழியோ இசைக்கு
ஆயுள் தருகிறது
ஐந்து பாடல்களுக்கும்
ஐம்பூதங்களை
உள்ளடக்கமாக்கியவர்
இயக்குநர் வசந்த்;
நல்லிசை நல்கியவர்
ஏ.ஆர்.ரகுமான்
நதியே நதியே பாடலில்… pic.twitter.com/LEUAhnKx62
