தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. அவர் கடைசியாக இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் உலகளவில் ரூ.1,100 கோடியை கடந்த வெற்றியை பெற்றது.
தற்போது, அல்லு அர்ஜுன் – தீபிகா படுகோனே இணைந்து நடிக்கும் பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார்.
நேற்று இயக்குநர் அட்லி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி பல திரைப் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து, அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
Wishing my nanbargal @Atlee_dir @am_kathir A very Happy Birthdayyy!!! 😁🤗♥️
— Keerthy Suresh (@KeerthyOfficial) September 21, 2025
This is my favvvv pic of the three of us!! 😻 pic.twitter.com/FI2yLF3Cni
அதேபோல, நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் கதிர் மற்றும் நடிகை கீர்த்தி ஷெட்டிக்கும் கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்தார்.
