தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாவார் சாய் பல்லவி. சிவகார்த்திகேயனுடன் நடித்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது இந்தியில் உருவாகும் ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்நிலையில், சாய் பல்லவி நீச்சல் உடையில் இருப்பது போல ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த போலி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கடும் கோபம் வெளியிட்டு, அவற்றை பகிர்ந்தவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் ராஷ்மிகா உள்பட பல நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் போலியாக வெளியிடப்பட்ட சம்பவங்கள் நடந்த நிலையில், சாய் பல்லவியின் பெயரும் இப்போது அதில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
