இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 1954 முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த இயக்குனர், ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை உள்ளிட்ட பல தொழில்நுட்ப துறைகளுக்கும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
2023 ஆம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை 4 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. விருது பெற்றவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நேரடியாக விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்வில், பார்க்கிங் திரைப்படத்தில் நடித்த எம். எஸ். பாஸ்கர், சிறந்த துணை நடிகர் பிரிவில் தேசிய விருதைப் பெற்று பெருமை பெற்றார்.
71st National Film Awards | Full list of winners here 📷 https://t.co/y88WqtoxqS #NationalFilmAwards #12thFail #IndianCinema #FilmAwards2025 #Bollywood #Cinema pic.twitter.com/QWMpOEhxGG
— cinema keeda (@cinema_keeda) September 24, 2025
