தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பில், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“என்னை கலைமாமணியாக தேர்ந்தெடுத்த தமிழக அரசு இயல், இசை, நாடக மன்றத்திற்கும், எனக்காக எப்போதும் துணை நின்ற திரைத்துறை நண்பர்களுக்கும், பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும், என் அன்பு ரசிகர்களுக்கும் இதயம் கனிந்த நன்றி.
இந்த கலைமாமணி பட்டத்தை எனக்கு வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Kodanakodi Nandrigal 🥰🙏🙏🙏sjs pic.twitter.com/kmtjBmHnUn
— S J Suryah (@iam_SJSuryah) September 24, 2025
நன்றி! நன்றி!! கோடான கோடி நன்றி!!!”
