தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நான்காவது படமாக ‘இட்லிக்கடை’ உருவாகியுள்ளது. இது அவர் நடித்துள்ள 52-வது திரைப்படம் ஆகும். இப்படத்திற்கான இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார்.
டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தில், அருண் விஜய் வில்லனாக நடித்து வருகிறார். அக்டோபர் 1ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. மேலும், ‘இட்லிக்கடை’ படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், மதுரையில் நடைபெற்ற ‘இட்லிக்கடை’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ், வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் உருவாகும் ‘வட சென்னை 2’ படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கி, 2027-ல் படம் திரைக்கு வரும் என்று அறிவித்தார்.
