தமிழ் சினிமாவில் அதிக சொத்து வைத்திருக்கும் நடிகைகள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி நிலையில் இருப்பவர் நயன்தாரா. இவர் சுமார் ரூ.220 கோடி முதல் ரூ.250 கோடி வரை சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இரண்டாவது இடத்தில், பால்நிற மேனியழகி தமன்னா உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.120 கோடி முதல் ரூ.150 கோடி வரை இருப்பதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவைத் தாண்டி, பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா, ரூ.90 கோடி முதல் ரூ.110 கோடி வரை சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
திரிஷா, சுமார் ரூ.85 கோடி சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
ஐந்தாவது இடத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.60 கோடி முதல் ரூ.70 கோடி வரை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
