தமிழ் டிவியில் பெரும் வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, தனது 9-வது சீசனுடன் அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது. 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்கி, வெளி உலகத் தொடர்பின்றி போட்டியாளர்கள் பணிகளை நிறைவேற்றி, மக்களின் வாக்குகளின் ஆதரவுடன் வெற்றியை கைப்பற்ற வேண்டும். பரிசாக ரூ.50 லட்சம் காத்திருக்கிறது!
இதுவரை ஆரவ், ரித்விகா, முகென், ஆரி, ராஜூ, அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமரன் போன்றோர் பட்டம் வென்றுள்ளனர். ஓவியாவின் பிரபல்யம், கவின்-லாஸ்லியா காதல், பிரதீப்பின் ரெட் கார்டு, தாடி பாலாஜி சம்பவம் போன்றவை பிக்பாஸ் வரலாற்றில் பேசப்பட்ட நிகழ்வுகள்.
முதல் சீசன் முதல் 7-வது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்க, 8-வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இப்போது 9-வது சீசனையும் அவர் தொகுத்து வழங்குகிறார்.
போட்டியாளர்கள் பட்டியலில் நடிகர் சித்து, பாரதி கண்ணம்மா ஃபரினா ஆசாத், சீரியல் நடிகை ஜனனி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பட்டி மன்ற பேச்சாளர் மஞ்சுநாதன் உள்ளிட்டோர் இடம்பெறுவதாக தகவல். மேலும் ஹார்ட் பீட் வெப் தொடரில் நடித்த பாடினி (அனிதா) மற்றும் சிறுவயது நடிகர் ரோஷனும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் 9 – யார் வெல்வார்?
