Ajith

ஆசிய லீ மான்ஸ் தொடரில் பங்கேற்க உள்ள அஜித்குமாரின் புதிய அணி

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், திறமையான கார் பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் அஜித்குமார். குட் பேட் அக்லி திரைப்படத்திற்குப் பிறகு, கார் ரேசிங்கில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

கடந்த ஆண்டு முதல் பந்தய உலகில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர், “Ajith Kumar Racing” என்ற தனது சொந்த பந்தய அணியை தொடங்கியுள்ளார். துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் இந்த அணி பங்கேற்று, பல்வேறு பரிசுகளையும் வென்றுள்ளது.

இப்போது, ஆசிய லீ மான்ஸ் தொடரில் பங்கேற்க அஜித்குமார் ரேசிங் அணி தயாராகியுள்ளது. இதில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா படேல் ஆகியோரும் இணைகிறார்கள்.

இந்த புதிய பந்தய அணியின் புகைப்படங்களை அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top