‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. டாக்டர் ப. அர்ஜுனன் தயாரிப்பில், அஜயன் பாலா இயக்கிய இப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குரூப், முனீஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டு வழக்கம்போல சினிமா வரலாறு குறித்தும், வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்தார். அப்போது சிங்கம்புலி குறித்து பேசும் போது மிஷ்கின் நகைச்சுவையாக,
“தமிழ் வாழ்க்கையின் உண்மையான வடிவம் சிங்கம்புலி. நள்ளிரவில் உற்சாக பானம் அருந்தி என்னை அழைப்பார். நானும் பெரும்பாலும் அதே சூழலில்தான் இருப்பேன். நள்ளிரவில் எந்தப் பெண்ணும் எனக்கு ‘ஐ லவ் யூ’ சொல்லியதில்லை; ஆனால் சிங்கம்புலிதான் சொல்வார். ‘எத்தனை ரவுண்டு போயிட்டு இருக்கு?’ என்று நாங்களும் சிரித்துக்கொண்டே பேசிக்கொள்வோம். இரவு 12 மணிக்குப் பிறகு ‘ஐ லவ் யூ’ சொல்லும் சிங்கம்புலி, குறைந்தது 200 பெண்களின் இதயங்களை தன் மனதுக்குள் வைத்திருப்பார் போல!”
என்று கூறிய அவர், “எதுவாக இருந்தாலும் நல்ல மனுஷன் தான் சிங்கம்புலி,” எனச் சேர்த்தார்.
அவரின் இந்த நகைச்சுவை உரை விழாவில் கலகலப்பை ஏற்படுத்தியது.
