இந்த ஆண்டு தமிழில் வெளியான டிராகன் படத்தின் மூலம் மிகுந்த கவனம் பெற்றவர் நடிகை கயாடுலோகர். மலையாளத் திரைப்படத்திலிருந்து தனது கேரியரை தொடங்கிய அவர், தற்போது தென்னிந்திய முழுவதும் வேகமாக முன்னேறி வரும் முக்கிய நடிகையாவார்.
தற்போது கயாடுலோகர் நடிப்பில் இதய முரளி என்ற புதிய தமிழ் படம் உருவாகி வருகிறது. இதில் அவர் நடிகர் அதர்வாவுடன் ஜோடியாக நடித்துள்ளார். டிராகன் படத்தின் வெற்றிக்குப் பிறகு, கயாடுலோகருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் இருந்து பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
சமீபத்திய பேட்டியில், தற்போது ஐந்து திரைப்படங்களில் நடித்து வருவதாகவும், அதில் ஒன்றில் சிலம்பரசன் (சிம்பு) உடன் இணைந்து நடித்திருப்பதாகவும் கயாடுலோகர் தெரிவித்துள்ளார்.
சினிமா வட்டாரங்களில், “இந்த வேகத்தில் சென்றால் விரைவில் கயாடுலோகர் தென்னிந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக மாறுவார்” என பேசப்படுகிறது.
