‘காந்தாரா சாப்டர் 1’ மூலம் உலகம் முழுக்க பேசப்படும் ரிஷப் ஷெட்டி – அவரின் வெற்றியின் பின்னால் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது.
அவரின் மனைவி பிரகதி ஷெட்டி சாமான்யப் பெண் அல்ல; காஸ்ட்யூம் டிசைனர். ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தில் பழங்கால மன்னர்களின் உடைகள் அனைத்தையும் வடிவமைத்தது அவர்தான். கணவரின் கனவுப் படத்துக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியிருப்பது இவர்களது வாழ்க்கையின் பெருமை.
இருவரும் ஒரே ஊரான குந்தாபுரத்தை சேர்ந்தவர்கள். ரக்ஷித் ஷெட்டி இயக்கிய ‘ரிக்கி’ படத்துக்குப் பிறகு தான் இவர்களது சந்திப்பு நடந்தது. அப்போது எடுத்த ஒரு செல்ஃபி தான் இவர்களது காதலின் தொடக்கம். பின்னர் ஃபேஸ்புக் மூலம் நட்பு வளர்ந்து, அன்பாக மாறி, திருமணத்தில் முடிந்தது.
இப்பொழுது இரு குழந்தைகளின் பெற்றோராக மகிழ்ச்சியாக வாழும் ரிஷப்–பிரகதி ஜோடி, சினிமா ரசிகையாக இருந்து இயக்குநரின் மனைவியாக மாறிய காதல் கதை என்ற தலைப்பில் ரசிகர்களிடையே பேசப்படுகிறது.
