நடிகர் ஹரிஷ் கல்யாண் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்த ஒரு சம்பவம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னேறி வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். அவர் 2010 ஆம் ஆண்டு ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதில் அமலா பால் அவருக்கு ஜோடியாக நடித்தார். படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், ஹரிஷின் நடிப்பு கவனிக்கப்பட்டது.
பின்னர் ‘அரிது அரிது’, ‘பியார் பிரேமா காதல்’, ‘தாராள பிரபு’, ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் ‘பியார் பிரேமா காதல்’ படம் அவரது கேரியரில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டீசல்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகிறது. இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களைப் பற்றி பேசிய ஹரிஷ் கல்யாண் கூறியதாவது:
“டீசல் படப்பிடிப்பு தொடங்கும் முன் நாங்கள் சில நாட்கள் கடற்கரையில் தங்கியிருந்தோம். அப்போது சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒரு மீனவர் என்னிடம் ஒரு அதிர்ச்சி சம்பவத்தை கூறினார். அவர் புயலால் கடலில் 48 நாட்கள் சிக்கி, தனது சிறுநீரை குடித்து உயிர் பிழைத்ததாக தெரிவித்தார்,” என்றார்.
