அஜித் தனது ரசிகர்களின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர் – விஜயை சீண்டிய பார்த்திபன்

ஸ்பெயினில் அஜித் குமாரை சந்தித்த ரசிகர்கள் விசிலடித்து ஆர்ப்பரித்தபோது, அமைதியாக இருக்கும்படி சைகை செய்த நடிகரும் ரேசருமான அஜித்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது ரசிகர்கள் தவறு செய்வதாக உணர்ந்தால், அவர்களை எப்போதும் நிதானமாக கண்டித்து வழிநடத்தும் நற்பண்புடையவராக அஜித் குமார் அறியப்படுகிறார். இதனால் நெட்டிசன்கள் அவரை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அஜித்தைப் பற்றி நடிகர் பார்த்திபன் ஒரு நேர்காணலில் கூறிய வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் ஒருவர் பகிர்ந்திருந்தார். அதில் பார்த்திபன்,
“அஜித் ஒரு தனித்துவமான மனிதர்; அவரின் முடிவெடுக்கும் திறன் மிகத் தெளிவாகும்,” என்று தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பார்த்திபன் தனது பதிவில்,
“Decision ma‘KING’ Ajith தான்! சலனமே இல்லாத மனிதர். கவனம் முழுவதும் சினிமாவிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும். பெரும் புகழும் ரசிகர் பலமும் இருந்தும், அதை அரசியல் மேடைக்கு மாற்ற நினைக்காதவர். தன்னை நேசிக்கும் ரசிகர்களின் பாதுகாப்பில் அக்கறை கொண்டவர். அதனால் தான் பிரமோஷன்களுக்கும் வராமல், தன் உலகத்தில் அமைதியாக வாழும் ஞானி மனநிலை மனிதர் — அபூர்வப் பிறவி. எல்லோருக்கும் நல்ல நண்பர், எனக்கும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே நேரத்தில், நடிகர் விஜய் அரசியலுக்காக தனது ரசிகர்களை பயன்படுத்தி அவர்களின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியதாக இணையத்தில் எழுந்த விமர்சனங்கள் மத்தியில், பார்த்திபனின் இந்த பதிவு விஜயை நோக்கி மறைமுகமாகச் செய்யப்பட்ட ஒரு குறிப்பு என பேசப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்