dude bts

Journey Of Dude…. டியூட் படத்தின் BTS வீடியோவை பகிர்ந்த பிரதீப்

8 / 100 SEO Score

இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டியூட்’.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் சரத்குமார், ரோகினி, ஹ்ரிது ஹரூன், டிராவிட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியான ‘டியூட்’ படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், படத்தின் பின்னணி காட்சிகள் (BTS) அடங்கிய ஒரு சிறப்பு வீடியோவை, பிரதீப் ரங்கநாதன் தனது X (Twitter) பக்கத்தில் “Journey of Dude…” என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top