தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற ஹிட் கேங்க்ஸ்டர் படங்களின் மூலம் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கியவர்.
சமீபமாகவே, அவர் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் பரவியது. இப்போது அதற்கான உறுதியான தகவல் வெளிவந்துள்ளது. கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்க்ஸ்டர் படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது உறுதி. இதற்காக அவர் சண்டை மற்றும் தற்காப்பு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும், புதிய லுக்கில் அவரை காணலாம் என்று கூறப்படுகிறது.
இரு திறமையான இயக்குநர்கள் இணைந்து உருவாக்கும் இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
