1

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத… திரிஷா நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த டாப் 10 படங்களின் லிஸ்ட்

மாடலிங் துறையில் இருந்து மிஸ் சென்னை பட்டம் வென்று சினிமா உலகில் அறிமுகமானவர் திரிஷா. தமிழ் சினிமாவில் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் அவர், பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். தனது நீண்ட கெரியரில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை வழங்கியுள்ள திரிஷாவின் டாப் 10 சிறந்த படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2

96 மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா

திரிஷாவின் கெரியரில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய இரண்டு படங்கள் என்றால் அது 96 மற்றும் விடிவி தான். இதில் 96 படத்தை பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஜானு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் திரிஷா. அதேபோல் கெளதம் மேனன் இயக்கிய விடிவி படத்தில் ஜெஸ்ஸியாக நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் இதயத்தையும் கொள்ளை கொண்டிருப்பார்.

3

கில்லி மற்றும் சாமி

நடிகை திரிஷாவுக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்த திரைப்படங்களில் சாமி மற்றும் கில்லி முக்கியமானவை. சாமி திரைப்படத்தை ஹரி இயக்கியிருந்தார். இதில் விக்ரமுக்கு இணையாக, பிராமண குடும்பத்தைச் சேர்ந்த நெல்லை பெண்ணாக திரிஷா நடித்திருந்தார். அந்தக் கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் கில்லி திரைப்படத்தில் முதன்முறையாக விஜய்க்கு இணையாக நடித்தார் திரிஷா. தரணி இயக்கிய இந்த திரைப்படம் வெளியானபோது பட்டி தொட்டியெங்கும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று மிகுந்த வெற்றியை பெற்றது.

4

மெளனம் பேசியதே மற்றும் உனக்கும் எனக்கும்

நடிகை திரிஷாவை ஹீரோவாக அறிமுகப்படுத்திய படம் மெளனம் பேசியதே. அமீர் இயக்கிய இதில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் திரிஷா. இதன் வெற்றிக்கு பின்னர் தான் அவருக்கு பட வாய்ப்புகள் மலமலவெனகுவிந்தன. அதேபோல் ஜெயம் ரவி ஜோடியாக திரிஷா முதன்முதலில் நடித்த படம் உனக்கும் எனக்கும்(சம்திங்-சம்திங்). இப்படத்தை ஜெயம் ரவி அண்ணன் மோகன் ராஜா இயக்கி இருந்தார். இது ரீமேக் படமாக இருந்தாலும் சூப்பர்ஹிட் ஆனது.

5

அபியும் நானும் மற்றும் பொன்னியின் செல்வன்

கமர்ஷியல் படங்களை தாண்டி திரிஷா தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்தார். அப்படி அவர் நடித்து ஹிட்டானது தான் இந்த இரண்டு படங்களும். இதில் அபியும் நானும் படத்தை ராதா மோகனும், பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னமும் இயக்கி இருந்தனர். இந்த இரண்டு படங்களிலும் திரிஷாவுக்கு தந்தையாக பிரகாஷ் ராஜ் நடித்து முத்திரை பதித்துஇருந்தார்.

6

லியோ மற்றும் மங்காத்தா

விஜய் மற்றும் அஜித்துடன் தொடர்ச்சியா ஹிட் படங்களில் நடித்தவர் திரிஷா. அந்த பட்டியலில் மங்காத்தா படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். வெங்கட் பிரபு அப்படத்தை இயக்கி இருந்தார். அதேபோல லியோ படம் தான் திரிஷா நடித்ததிலேயே அதிக வசூல் செய்த படமாகும். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்யின் மனைவியாக நடித்திருந்தார் திரிஷா.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்