பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, இந்திய புராணக் காவியமான ராமாயணத்தை திரையுலகிற்கு கொண்டு வருகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.
இதில் ராமராக – ரண்பீர் கபூர், சீதையாக – சாய் பல்லவி, ராவணனாக – யாஷ், அனுமனாக – சன்னி தியோல், மண்டோதரியாக – காஜல் அகர்வால் நடிக்கின்றனர்.
இந்த தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் உருவாகும் இந்தப் பிரம்மாண்டத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது.
வெளியீட்டு தேதி: முதல் பாகம் – 2026 தீபாவளி, இரண்டாம் பாகம் – 2027 தீபாவளி என எதிர் பார்க்கப்படுகிறது.
இசைமொழி கலந்த புது முயற்சி!
தற்போது வெளியான அறிமுக டீசரில், எதிர்பாராத சுர்ப்ரைஸ் ஒன்று ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதாவது, இந்தப் படத்திற்கு இசையமைப்பது ஹாலிவுட் இசைமாயாஜாலம் ஹான்ஸ் ஸிம்மர் மற்றும் நம் ஏ.ஆர். ரஹ்மான்!
ஹான்ஸ் ஸிம்மர், The Lion King, The Dark Knight, Inception, Interstellar போன்ற ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து உலக புகழ் பெற்றவர். அண்மையில் வெளிவந்த F1 படத்தில் கூட இவரது இசை பரவலான பாராட்டைப் பெற்றது. ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஸிம்மர் இருவருக்கும் நீண்டநாள் நட்பு உள்ளது.
இந்த இசை கூட்டணியால் இப்படத்தின் பின்னணி இசை (BGM) ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது முதல் முறையாக ஹான்ஸ் ஸிம்மர் ஒரு இந்திய திரைப்படத்திற்கு இசையமைக்கிறார், அதுவும் நம்முடைய ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து – எனவே, இது இந்திய சினிமாவின் இசை வரலாற்றில் ஒரு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது!