சரண் இயக்கத்தில், நடிகர் அஜித் மற்றும் பூஜா நடிப்பில் 2004-ஆம் ஆண்டு வெளியான அட்டகாசம் திரைப்படம், அக்.31-ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது.
விஜயம் சினி கம்பைன்ஸ் தயாரித்த இந்த படத்தில், “தல போல வருமா” உள்ளிட்ட பாடல்கள், ஆக்ஷன், காமெடி மற்றும் கமெர்ஷியல் அம்சங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன.
இந்த ரீரிலீஸை IFPA Max Productions சார்பாக பிரியா நாயர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடைசியாக, அஜித் நடித்த Good Bad Ugly திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. தற்போது கார் ரேசிங்கில் பிஸியாக இருக்கும் நிலையில், புதிய படத்துக்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு, இந்த அட்டகாசம் ரீரிலீஸ் ஒரு சிறப்பு விருந்தாக அமைகிறது.
பாதுகாப்புக்கு யாரும் இல்லை…
— SARAN (@dirsaran) September 16, 2025
இவன் பத்து விரல்களும் காவல் துறை…
வெற்றி வெற்றிதான் ஆயுள்வரை…
தல போல வருமா?!
'தல' யே வர்றாரு…அக்டோபர் 31 அன்னிக்கு! தீபாவளிக்கு பத்து நாள் தள்ளிதான் நம்ம 'தல தீபாவளி' ! Reserve the crackers !
'அதகளம்' பண்றோம்! pic.twitter.com/vWVCIRuHMq
உங்களுக்கு தெரியுமா? அட்டகாசம் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் தளபதி விஜய் தான்! ஆனால், சில காரணங்களால் விஜய் அந்த வாய்ப்பை தவிர்த்தார். அதன் பின்னர் இந்தக் கதை நடிகர் அஜித் அவர்களிடம் சென்றது. இதுகுறித்து இயக்குனர் சரண் ஒரு பேட்டியில் நேரடியாக பகிர்ந்துள்ளார்.
