நடிகர்கள்: அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா, காளி வெங்கட் நாசர் அபிராமி சிங்கபுலி , சிங்க புலி பால சரவணன் மற்றும் பலர்.
டி இமான் இசையமைக்க, விஷால் வெங்கட் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாக்கியுள்ள படம் தான் பாம் ஒரு கிராமத்தில் ஊர்மக்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் எதிர்பாராத ஒரு நாள் கடவுளை மையமாக வைத்து அந்த ஊர் மக்கள் தனி தனியா ஊராக பிரிந்து வாழ்கின்றன.
அர்ஜுன் தாஸ் ஒரு புறமும் காளி வெங்கட் மறு புறமும் இருந்து கொண்டு மீண்டும் ஊர்மக்கள் ஒன்றாக சேர வேண்டும் என்று போராடுகிறார்கள், சேர்ந்தார்களா? இல்லையா? இவர்கள் என்னென்ன இன்னல்கள் கஷ்டப்பட்டார்கள் என்பதுதான் மீதி கதை.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் இது ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடித்து உள்ளார் முற்றிலும் வித்தியாசமான ஒரு நடிப்பில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
நிச்சயம் ரசிகர்களால் பாராட்டாமல் இருக்க முடியாது அளவில் உள்ளது, அவரது நடிப்பு,காளி வெங்கட் பங்கு மிக பெரிய பலம் என்று தான் சொல்ல வேண்டும், நாசர் அபிராமி சிங்க புலி இவர்களின் சிறப்பாகவே அமைந்துள்ளது
டி இமான் இசையில் கதைக்கு ஏற்ப ரசிக்கும் படியாக அமைந்துள்ளார் பாடல்கள் சுமார் தான், கதை மற்றும் திரைக்கதை இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கியுள்ள விதமும் மிகப்பெரிய வாழ்த்துக்கள், கதை வழக்கம் போல் இருந்தாலும் அதை திரைக்கதையில் அவர் காட்டியிருக்கும் விதமும் ஒரு புது விதமான முயற்சி தான் என்று சொல்ல வேண்டும்.
கிளைமாக்ஸில் கடவுள் நம்பிக்கை விட மனித நம்பிக்கையே மிகப் பெரியது என்று நிரூபித்து காட்டியுள்ளார். நிச்சயமாக மனிதநேயத்தை விரும்பும் அனைத்து மக்களுக்கும் இத் திரைப்படம் பிடிக்கும்.
