google.com, pub-6365925432395269, DIRECT, f08c47fec0942fa0

13-ந்தேதி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசின் பாராட்டு விழா!

இசையமைப்பாளர் இளையராஜா கடந்த மார்ச் 8-ந்தேதி லண்டனில் நடைபெற்ற சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினார்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை திரும்பியபோது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, இசைஞானியின் 50 ஆண்டுகால இசைப்பயணத்தை நினைவுகூரும் வகையில் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 13-ந்தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இளையராஜாவை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலாகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் பங்கேற்க இருக்கின்றனர். மேலும், வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் இணைந்து சிறப்பு இசைக்கச்சேரியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்