மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் படம் ‘பைசன்’. இதில் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளன.
இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘பைசன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படம் தீபாவளி சிறப்பாக வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் விழாக்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் நடந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் துருவ் விக்ரம் பேசியதாவது:
“நான் இதுவரை இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். அவற்றை நீங்கள் பார்த்திருக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ‘பைசன்’ படத்தை கண்டிப்பாக பாருங்கள். இதைத்தான் என் முதல் படமாக நான் நினைக்கிறேன். நீங்களும் அதேபோல உணருவீர்கள் என நம்புகிறேன்.
#DhruvVikram at today's event:
— AmuthaBharathi (@CinemaWithAB) October 5, 2025
"My Name is Dhruv, I have done 2 Films so far. I have no problem if you haven't watched those 2 Films✌️. But #Bison you should watch, this is my Actual 1st film🔥. I've given my 100% for this🫡. #MariSelvaraj sir 'Erangi Sambavam pannirukaru'🥵.… pic.twitter.com/AEEHFVz0KR
இந்த படத்திற்காக முழு குழுவும் மிகவும் கடுமையாக உழைத்துள்ளது. நானும் என் 100% உழைப்பை கொடுத்திருக்கிறேன். இயக்குநர் மாரி செல்வராஜ் ரொம்ப உழைத்து, கஷ்டப்பட்டு, படத்தை சம்பவமாக்கியிருக்கிறார். அந்த உழைப்பு எல்லோரிடமும் சேரட்டும். படம் திரையரங்கில் கண்டிப்பாக போய் பாருங்கள்,” என்றார் துருவ் விக்ரம்.
