இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களையும், சிறந்த வசூலையும் பெற்றது.
இதற்கிடையில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியானது. இதை கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தினார்.
முதலில் அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் ரஜினிகாந்த், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கும் தனது அடுத்த படத்தை அறிவித்தார்.
அப்போது அவர், “கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கு, பிளானும் இருக்கு. ஆனால் அந்தக் கதை, கதாபாத்திரம், இயக்குநர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. முடிந்ததும் நிச்சயமாக நடிப்பேன்,” என்று கூறினார்.
இதன்மூலம், அந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், “ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தை யார் இயக்கப்போகிறார்?” என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
"When I initially read #Dude script i rejected, there is a shocker & i thought people make Comedy Piece out of me😅. After watching film, that's best part of Dude❤️🔥. #RaviMohan sir believed me in #Comali, I just did the same to him🫶"
— AmuthaBharathi (@CinemaWithAB) October 7, 2025
– #PradeepRanganathanpic.twitter.com/uawJgJ8Cd1
இதற்கிடையில், ‘கோமாளி’, ‘லவ் டுடே’ போன்ற படங்களை இயக்கி பிரபலமான பிரதீப் ரங்கநாதன் தான் அந்த மாபெரும் இணைப்பு படத்தை இயக்கப்போகிறார் என்ற வதந்தி இணையத்தில் வேகமாக பரவியது.
