புதிய கதாநாயகன் தமிழ் நடிப்பில் உருவாகும் ‘டபுள் கேம்’ திரைப்படத்தின் முதல் பார்வைப் போஸ்டர் (First Look Poster) தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் போஸ்டரை பிரபல இயக்குநர்கள், சீனு ராமசாமி, மித்ரன் ஆர். ஜவகர், விஜய் மில்டன் ஆகிய மூவரும் இணைந்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து, படக்குழுவிற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
படக்குழு விவரம்: இயக்கம் – தாஜ், நடிப்பு – தமிழ், சாய் பிரியா தேவா, விஹான், ரியாஸ் உள்ளிட்ட பலர், ஒளிப்பதிவு – விஜய். எஸ், இசை – எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட், தயாரிப்பு – டாம்’ஸ் கன்சல்டன்சி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தமிழழகன்
புதிய முயற்சி… புதிய முகங்கள்…
அதிரடி, திருப்பம், சஸ்பென்ஸ் ஆகியவை மையமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் ‘டபுள் கேம்’ திரைப்படம், புதிய நாயகனை தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்துகிறது என்பதாலும் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.