சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாப்புலர் சீரியல் ‘எதிர்நீச்சல்’, பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் போன்ற சமூகச் சிக்கல்களை முன்வைத்து நம்மை சிந்திக்க வைக்கும் தொடராக மாறியுள்ளது. ‘கோலங்கள்’ புகழ் திருச்செல்வம் இயக்கும் இந்த தொடர் தற்போது பல பெண்களின் வாழ்வில் நடந்துகொண்டிருக்கும் உண்மைகளை சித்தரிக்கிறது.
கதை சுருக்கம்:
இந்த தொடரின் மையக் கதையாக, “என் சொல்றதுதான் நடக்கணும்” என்ற ஆணாதிக்க எண்ணத்துடன் வீட்டிலுள்ள பெண்களை கட்டுப்படுத்த முயலும் குணசேகரன் மீது கட்டவிழ்க்கும் புது முயற்சியுடன் தான் தற்போதைய எபிசோடுகள் பயணிக்கின்றன.
இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது?
இன்றைய எபிசோடில், ஈஸ்வரி ஒரு செம செக் வைக்கிறார்.
“தர்ஷன் எங்கே இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும்… ஆனால் நாங்கள் கூறும் விஷயம் நடந்தால் மட்டுமே அதை சொல்லுவோம்” என்கிறார் ஈஸ்வரி. இதனால் குணசேகரன் மாட்டிக்கொள்கிறார்.
தர்ஷனை திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கும் குணசேகரன், அறிவுக்கரசியை அழைத்து –
“உன் தங்கைக்கு வேறு மாப்பிள்ளை பார்த்துக்கோ!” என்று கூறுகிறார்.
ஆனால்…
குணசேகரன் கையில் கை நிறைய திட்டமிருக்கிறது!
“தர்ஷன் வீட்டிற்கு வந்ததும் அவருக்கு வேலையை காட்டுவார்!” என்று ரசிகர்கள் புரொமோவின் கீழ் சப்போர்ட் காட்டி, கலக்கல் கமெண்ட்ஸ் இடுகின்றனர்.
‘எதிர்நீச்சல்’ சீரியலின் எதிர்வரும் எபிசோடுகள் மேலும் பரபரப்பாக இருக்கப் போவதை புரொமோவிலேயே உணர முடிகிறது!