ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படத்தின் டிரெய்லர் (ஜூலை 19, 2025) வெளியானது. இந்த டிரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கியுள்ள ‘பிளாக்மெயில்’ படத்தில், தேஜு அஸ்வினி கதாநாயகியாக நடிக்கிறார்.
ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாம் சி.எஸ். இசையமைத்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியாக உள்ளது.
