சென்னை – நடிகர்கள் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்துள்ள மாரீசன் திரைப்படம் இந்த மாதம் 25ம் தேதி வெளியிடப்பட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த இருவரும் முந்தைய ஆண்டு மாமன்னன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்த படம் பெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து, அவர்கள் மீண்டும் மாரீசன் என்ற புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.
இந்த படம் ஆர் பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 98வது திரைப்படமாகும்.
இப்படத்தை மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார்.
இசையை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வி கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் மற்றும் கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.