பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது பெயர், புகைப்படங்கள் மற்றும் தனித்துவ உரிமைகள் அனுமதியின்றி வணிகப் பொருட்களிலும், AI மூலம் உருவாக்கப்பட்ட போலி படங்களிலும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 151 இணைய முகவரிகளில் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தவறாகப் பரவியிருப்பதை நீக்கவும், இனிமேலும் அனுமதியின்றி பயன்படுத்துவதைத் தடுக்கவும் இடைக்கால உத்தரவை பிறப்பித்து உள்ளர் .
வழக்கு மீண்டும் ஜனவரி 15, 2026 அன்று விசாரணைக்கு வரும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
