பிரபல ஹாலிவுட் நடிகரும், இயக்குநர் குவென்டின் டரான்டினோவின் முக்கிய படங்களில் நடித்து உலகம் முழுவதும் அறியப்பட்டவருமான மைக்கேல் மேட்சன், மாரடைப்பால் வயது 67-ல் காலமானார்.
‘ரிசர்வாயர் டாக்ஸ்’, ‘கில்பில்’, ‘தி ஹேட்புல் எய்ட்’, ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ உள்ளிட்ட பல ஹாலிவுட் ஹிட் படங்களில் தனது சக்திவாய்ந்த நடிப்பால் பாராட்டைப் பெற்றவர் மைக்கேல் மேட்சன்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் மலிபு பகுதியில் வசித்து வந்த அவர், சமீபத்தில் ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை உறுதி செய்துள்ளது. அவரது மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.
மைக்கேல் மேட்சனின் காலமானது, ஹாலிவுட் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.