மாடல் அழகியாக தனது பயணத்தைத் தொடங்கி, ராஜா ராணி, காலா உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை சாக்ஷி அகர்வால், பிக் பாஸ் நிகழ்ச்சியால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. சமீபத்தில் அதர்ம கதைகள், கெஸ்ட், தி நைட் போன்ற படங்களில் நடித்திருந்தார். கடந்த ஜனவரியில், தனது சிறுவயது நண்பர் நரனீத் மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், சாக்ஷி அகர்வால் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “நான் சைவ உணவை ஆர்டர் செய்திருந்தேன். ஆனால் சிக்கன் வந்துள்ளது. சுத்த சைவமாக இருப்பவரான எனக்கு இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. என் மத உணர்வுகளை புண்படுத்தியதற்கு நன்றி” என்று ஸ்விக்கி நிறுவனத்தை குற்றம்சாட்டியிருந்தார்.
பின்னர் தமிழில் பேசும் தனி வீடியோவிலும் விளக்கம் அளித்தார்.
I ordered a pure veg meal… but guess what arrived? The ultimate food delivery plot twist! 🌱➡🍗 Watch till the end . Would you eat it or send it back? 😡 #FoodFail #Relatable #SakshiAgarwal #FoodDeliveryFail #VegVsNonVeg #FoodieLife #ViralReel #UnexpectedDelivery #FoodLovers pic.twitter.com/iIHEOISsm0
— Sakshi Agarwal (@ssakshiagarwal) September 23, 2025
அதில் அவர் கூறியதாவது:
“கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் ஸ்விக்கி மூலம் பன்னீர் ஆர்டர் செய்தேன். ஆனால் சிக்கன் டெலிவரி செய்யப்பட்டது. நான் வாழ்நாளில் அசைவம் சாப்பிட்டதே இல்லை. உணவில் மோசமான மணமும் சுவையும் இருந்ததால் சந்தேகப்பட்டு பார்த்தேன். அது சிக்கன் என்று தெரிந்தவுடன் உடனே வாந்தி வந்துவிட்டது.
இது சைவம்–அசைவம் சாப்பிடுபவர்களுக்கிடையேயான பிரச்னையோ, இந்து–மற்ற மதத்தினருக்கிடையேயான பிரச்னையோ அல்ல. இது வாடிக்கையாளர் மற்றும் சேவை நிறுவனத்துக்கிடையேயான பிரச்னை. உணவு என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. நான் அசைவம் சாப்பிடாதது என் உரிமை. உணவு என்பது வெறும் சுவை மட்டுமல்ல, அது நம்பிக்கை, கலாசாரம், மத உணர்வுகளுடன் தொடர்புடையது. எனவே இப்படியான தவறுகள் இனி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
