நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து உருவாகியுள்ள இட்லி கடை திரைப்படம் சிறிய காத்திருப்புக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தனுஷ் இயக்குநராக அறிமுகமான பவர் பாண்டி திரைப்படம் ரசிகர்களிடையே தனி கவனத்தையும் அன்பையும் பெற்றிருந்தார். ஆனால் 50வது படமான ராயன் மூலம் அவர் எழுதி, இயக்கி, ரசிகர்களின் நம்பிக்கையை கொஞ்சமாக இழந்ததாகவே சொல்லலாம். இப்போது இட்லி கடை மூலம் அந்த நம்பிக்கையை மீட்டாரா என பார்க்க வேண்டியுள்ளது.
கதை:
சொந்த ஊரில் குட்டியாக ஒரு இட்லி கடையை வைத்து தனது கைத்திறனுடன் வாழும் சிவநேசன் (ராஜ்கிரண்). பல கிளைகளைத் திறப்பதற்கு பதிலாக, ஒரு கடையைச் செம்மையாக நடத்தி, போதுமான வருமானம் கிடைத்தாலே போதும் என எண்ணுகிறார். அவன் மகன் முருகன் (தனுஷ்) சமையலில் ஆர்வம் கொண்டவனாக இருந்தாலும், கிராம வாழ்வில் தன் வாழ்க்கையை மட்டுப்படுத்த விரும்பாமல் வெளிநாட்டில் பெரிய நிறுவனத்தில் பணிபுரிகிறார். அங்கு சில உறவுகளையும் உருவாக்கிக்கொள்கிறான்.
ஆனால் கிராமத்தில் வசிக்கும் அவரது பெற்றோர் ஊரை விட்டு விலக விரும்பவில்லை. அதனால் தந்தை கவலைப்படுகிறார்—இந்த இட்லி கடையை யார் பார்த்துக்கொள்வார்? இதற்காக முருகன் வெளிநாட்டிலிருந்து திரும்பி, தந்தை ஆசைப்படியபடி கடையை நடத்துவாரா, இல்லையா என்பதே கதையின் சுவாரஸ்யம்.
நடிப்பில், தனுஷ் ராயனை ஒப்பிடுகையில் சிறிது மும்மரமாக இருந்தாலும், கதையின் தேவைக்கு ஏற்ப மென்மையான நடிப்பு வழங்கியுள்ளார். கதாபாத்திரங்களின் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. முக்கிய நடிகர்கள்:
தனுஷ் – முருகன்,நித்யா மேனன் – கிராம பெண்,ராஜ்கிரண் – சிவநேசன்,கீதா கைலாசம் – அம்மா,சத்யராஜ், இளவரசு, பார்த்திபன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சமுத்திரக்கனி மற்றும் பலர்
அவர்கள் எல்லோர் கதாபாத்திரங்களும் மனதில் நிற்கும் வகையில் நடித்துள்ளனர். குறிப்பாக, அருண் விஜய் தனித்த இடம் பெற்றுள்ளார்; நித்யா மேனன் கிராம பெண்ணாக வெகுளியாக கவர்ந்துள்ளார்; ராஜ்கிரண் தனது கதாபாத்திரத்தின் தூய்மையை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்; கீதா கைலாசம் அம்மா கதாபாத்திரத்தில் மனதை தொட்டுள்ளார்.
கதை மற்றும் இயக்கத்தில், தனுஷ் சாதாரணமான கதை சொல்லும் முயற்சியுடன் கமெர்ஷியல் சுவை சேர்த்துள்ளார். கதாபாத்திரங்களை கவனமாக கையாள்கிறார்; சத்யராஜ், பார்த்திபன் போன்றோரின் கதாபாத்திரங்களும் புதுமை சேர்க்கப்பட்டுள்ளன. சில வசனங்கள் நெருக்கமாகத் தோன்றினாலும், கதை மென்மையாக, பொறுமையாக நடக்கிறது.
மொத்தத்தில், இட்லி கடை குடும்பத்துடன் சென்று ரசிக்கக்கூடிய, மென்மையான, பொறுமையான நல்ல கதையாக உருவாகியுள்ளது.
