பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள லோகா திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் சாண்டி, சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலசந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். டொமினிக் அருண் இயக்கிய இப்படத்தில் சாண்டியின் வில்லன் வேடம் ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு அளித்துள்ளது.
திரைப்படம் வெளியாகிய சில நாட்களிலேயே சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக கல்யாணியின் நடிப்பு அனைவராலும் பெரிதும் கவனிக்கப்பட்டுள்ளது. தமிழில், மலையாளத்தில், தெலுங்கில் வெற்றி கண்ட பின்னர், இந்த படம் கடந்த 5 ஆம் தேதி இந்தி மொழியிலும் வெளியிடப்பட்டது.
இப்போது லோகா உலகளவில் ரூ.202 கோடி வசூல் செய்து, மிக விரைவில் ரூ.200 கோடி எட்டிய இரண்டாவது மலையாள திரைப்படமாக சாதனை படைத்துள்ளது.
இந்த வெற்றிக்கிடையே, இந்த வாரம் IMDB வலைத்தளத்தில் இந்திய திரைப் பிரபலங்களில் முதலிடத்தை பிடித்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். இரண்டாவது இடத்தில் ஷாருக்கான் உள்ளார்.
