மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் ‘பைசன்’. இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது ஒரு கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை.
பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தீபாவளி சிறப்பாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் படத்திற்கு தணிக்கை குழுவின் U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 2 மணி 48 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான தினம் நெருங்கி வரும் நிலையில், ‘பைசன்’ படத்துடன் தொடர்பான போஸ்டர் மற்றும் பாடல் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், இன்று மாலை 6 மணிக்கு ‘காளமாடன் கானம்’ பாடல் வெளியாகும் என இயக்குநர் மாரி செல்வராஜ் போஸ்டரை வெளியிட்டு அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது ‘காளமாடன் கானம்’ பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
