ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், நடிகர் கார்த்தி முன்னணி கதாபாத்திரத்தில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள “வா வாத்தியார்” திரைப்படம் வரும் டிசம்பர் 5, 2025 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பல்வேறு விதமான கதைகளில் சிறந்து விளங்கும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான படைப்புகளுக்காக பெயர் பெற்ற இயக்குநர் நலன் குமாரசாமி இணைந்திருப்பது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், படக்குழுவினர் வெளியிட்ட புதிய போஸ்டரில் வெளியீட்டு தேதி 05.12.2025 என குறிப்பிடப்பட்டுள்ளது. போஸ்டரில் கையில் சவுக்குடன் ஸ்டைலாக நிற்கும் கார்த்தி காட்சியளிக்க, பின்னணியில் ஆர்ப்பரிக்கும் கூட்டம் — இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்படத்தில் கார்த்தியுடன் சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி.எம். சுந்தர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவு ஜார்ஜ் வில்லியம்ஸ், இசை சந்தோஷ் நாராயணன், கலை இயக்கம் டி.ஆர்.கே. கிரண், தொகுப்பு வெற்றி, சண்டைக் காட்சிகள் அனல் அரசு ஆகியோரின் திறமையால் படத்தின் தொழில்நுட்பம் சிறப்பாக உருவாகியுள்ளது.
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்டமான படத்தின் டிரெய்லரும் இசை வெளியீடும் விரைவில் வெளியாக உள்ளன. “வா வாத்தியார்” வெளியீட்டு தேதி அறிவிப்பு ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
