அனிமேஷன் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு உண்டு. அனிமேஷன் என்பது குழந்தைகளுக்காக மட்டும் உருவாக்கப்படுவது அல்ல; அது பெரியவர்களின் உள்ளத்தில் இருக்கும் குழந்தைத்தன்மையை மீண்டும் வெளிக்கொணரும் தன்மை கொண்டது. மொழி, எல்லை என்ற வித்தியாசமின்றி உலகம் முழுவதும் அனிமேஷன் படங்களுக்கு அதிகமான வரவேற்பு கிடைக்கிறது.
சமீப ஆண்டுகளில் இந்திய சினிமாவில் வெளிவரும் அனிமேஷன் படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுகளையும், வசூல் ரீதியாக வெற்றிகளையும் பெற்று வருகின்றன. ஆனால் ஒரு அனிமேஷன் படத்தின் உண்மையான வெற்றி, அது அனைத்து தரப்பினரையும் கவர்ந்து மகிழ்விப்பதில்தான் இருக்கிறது.
அந்த வகையில், இனிகா புரொடக்சன்ஸ் தங்களது முதல் அனிமேஷன் தயாரிப்பாக “கிகி & கொகொ” திரைப்படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. குழந்தைகளின் கல்வியையும் எண்டர்டெயின்மெண்ட்டையும் இணைக்கும் புதிய கண்ணோட்டத்துடன் உருவாகும் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பி. நாராயணன் இயக்குகிறார்.
கிகி என்ற அன்பான செல்லப்பிராணி மற்றும் கொகொ என்ற இளம் பெண் – இவர்களுக்கிடையிலான அன்பும் நட்பும், வாழ்க்கை பாடங்களும் நிரம்பிய அழகான கதையை இந்த படம் சொல்கிறது. அவர்களின் பயணம் பார்வையாளர்களுக்கு மேஜிக்கல் தருணங்களை பரிசளிக்கப்போகிறது.
இயக்குநர் பி. நாராயணன் கூறியதாவது:
“இன்றைய சூழலில் குழந்தைகளுக்கான கல்வி சார்ந்த படங்களே மிக முக்கியம். அந்த நோக்கத்திலேயே ‘கிகி & கொகொ’ படத்தில் நட்பு, அன்பு, குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கிடையிலான உறவு குறித்து பதிவு செய்துள்ளோம். பார்வையாளர்களுக்கு இதை திரையிட்டு காண்பிப்பதில் மிகுந்த உற்சாகமாக இருக்கிறோம்.”
இனிகா புரொடக்சன்ஸ் குழுவின் கூற்றுப்படி:
“‘கிகி & கொகொ’ வெறும் படம் அல்ல, அதைக் கடந்த ஒன்று. நட்பு, அன்பு, கதை சொல்லல் ஆகியவற்றின் மூலம் குழந்தைகள் கற்றுக்கொள்வதை கொண்டாடும் அனுபவமாக இது இருக்கும். திறந்த மனதுடன் அனைவரையும் இந்த மேஜிக்கல் பயணத்தை காண வரவேற்கிறோம்.”
திரையரங்க அனுபவத்தை தாண்டி, கல்வி நோக்கத்துடன் உருவாகியுள்ள இந்த படம், குழந்தைகளுக்கும் குடும்ப பார்வையாளர்களுக்கும் என்றும் மறக்கமுடியாத நினைவாக நிற்கும்.
