விறுவிறுப்பு,காமெடி, லைட்டா ஒரு மெசேஜ் என வழக்கமான டெம்பிளேட் படம் தான் குமார சம்பவம்!

இயக்குநராகும் லட்சியத்தில் பல தயாரிப்பாளர்களுக்கு கதை சொல்லி வருகிறார் நாயகன் குமரன். சின்ன வயதில் தனது தந்தையை இழக்கும் குமரன் தாத்தா , அம்மா , தங்கையுடன் வசித்து வருகிறார். அவரது வீட்டின் மேல்மாடியில் குடியிருக்கிறார் சமூக செயற்பாட்டாளரான வரதராஜன் (இளங்கோ குமரவேல்).

பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தொடர்ந்து போராடி வருகிறார் வரதா. அதற்கான பின்விளைவுகளை நாயகன் குமரன் எதிர்கொள்கிறார். இதனால் போராட்டக்காரர்கள் மேல் குமரனுக்கு ஒரு ஒவ்வாமை உருவாகிறது. குமரனின் தாத்தா வரதராஜன் மீது அதிக நெருக்கம் காட்டும் காரணத்தினால அவரை சகித்துக் கொள்கிறார்.

பல தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி எதுவுமே கைகூடாததால் தனது படத்தை தானே தயாரிக்க முடிவு செய்கிறார். இதற்காக தனது தாத்தாவிடம் வீட்டை விற்க சொல்கிறார். இப்படியான நேரத்தில் தான் வரதராஜன் மர்மமான முறை கொலை செய்யப்படுகிறார்.

குமரன் வீட்டை விற்று தனது படத்தை இயக்கினாரா? வரதனை கொன்றது யார் என காவல் துறை விசாரணையின் வழியாக சொல்லப்படுகிறது குமார சம்பவம் படத்தின் கதை. விறுவிறுப்பும் காமெடி மற்றும் லைட்டாக ஒரு மெசேஜ் என வழக்கமான ஒரு டெம்பிளேட் படம் தான் குமார சம்பவம்.

இந்த வழக்கமான கதையை கிரேஸி மோகன் பாணியிலான ட்விஸ்டட் நகைச்சுவையால் சுவாரஸ்யமாக வைத்துக் கொள்கிறார் இயக்குநர் . வழக்கமாக சென்றுகொண்டிருக்கும் காட்சியில் திடீரென்று ஒரு கேரக்டர் சொல்லும் வசனம் ரசிக்கும்படியாக மாற்றிவிடுகிறது.

நகைச்சுவை நடிகர்கள் என மட்டுமில்லாமல் படத்தில் உள்ள அத்தனை கதாபாத்திரங்களும் ஒரே சிங்கில் இருப்பது போல எதிர்பார்க்காத நேரத்தில் காமெடி துணுக்குகளை அவிழ்த்து விடுகிறார்கள்.

இதில் சில காமெடிகளை அது முடிந்தபின்பே நாம் கவனித்து சிரிக்கிறோம். முதல் பாதியில் கதைக்களம் மற்றும் அதிலுள்ள கதாபாத்திரங்களை ஒவ்வொன்றாக ஒப்பன் செய்கிறார்கள். இரண்டாம் பாதியில் அனைவரையும் வைத்து ஒரு காமெடி டிராமாவை கட்டமைத்திருக்கிறார்கள்.

சம்பிரதாயத்திற்கு ஒரு லவ் சாங் வைத்திருந்தாலும் இறந்த பாட்டியின் ஃபோட்டோவை வைத்து உருவாக்கப்பட்டிருந்த பாடல் நல்ல முயற்சி.

குமரன் இயல்பான நடிப்பால் நகைச்சுவையும் அதே நேரம் ஹீரோ இமேஜையும் பேலன்ஸ் செய்திருந்த விதம் சிறப்பு. ஜி.எம்.குமார் இளங்கோ குமரவேல் எப்போதும் போல் தேந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

பால சரவணன் , வினோத் சாகர் கவனமீர்க்கிறார்கள். கதையின் தன்மையை மீறாத பின்னணி இசையை வழங்கியுள்ளார் ராஜாமணி. வரதாவை கொன்றது யார் என்பது இறுதியில் ரிவீல் செய்யப்படுகிறது.

இந்த அளவிற்கு ஹ்யூமராக கொண்டு போகிறார்கள் என்றால் வழக்கமான டெம்பிளேட் காட்சிகளை நீக்கிவிட்டு காமெடிக்கு இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் மிகவும் தனித்துவமான ஒரு படமாக குமார சம்பவம் இருந்திருக்கும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்