தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் விஜய். அவருடைய நடிப்பில், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், ஜோதிகா ஜோடியாக நடித்த குஷி திரைப்படம் 2000 மே 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது.
காதலை மையமாகக் கொண்ட இந்த படம், விஜயின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அந்நேரத்தில் உலகளவில் ரூ.22 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.
இப்போது, தரம் உயர்த்தப்பட்ட 4K வடிவில் குஷி திரைப்படம் மறுபடியும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வருகிற 25ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
🎬✨ The reel magic rolls again!
— Sakthi Film Factory (@SakthiFilmFctry) September 18, 2025
The Kushi Re-Release Trailer Cut is here to set the vibe 💥
Get ready to groove with nostalgia, charm & timeless feels! 🌟https://t.co/d7GvQO8c3g
In Cinemas from Sept 25th 🎬
A re-release celebration by Sakthi Film Factory 🎉@actorvijay…
இதனை முன்னிட்டு, குஷி பட இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லரை வெளியிட்டுள்ளார்.
